68 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை.. கொண்ட கொள்கையில் மாறாத மனிதர் தா.பா !
தா.பாண்டியன் அரசியல் வாழ்க்கை அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்து விடாது.. மொத்தம் 68 வருடங்களாக கொண்ட கொள்கையில் மாறாமல், மக்கள் சேவையாற்றியவர் தா.பாண்டியன் என்றால்.. சம காலத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை! மிரட்டல்களுக்கும், பணத்திற்கும் என பல காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் சேரும் எம்எல்ஏக்களை பார்த்து, அரசியலையே வெறுத்துப்போய் இருக்கும் மக்களுக்கு, தா.பாண்டியன் வாழ்க்கை ஒரு கிரியா ஊக்கி. ஒரே கொள்கை.. அது, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமை..