தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த அசன் முகமது ஜின்னா(44) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். அசன் முகமது ஜின்னா, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வக்கீல்