தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா… சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு!

Posted by - December 16, 2021

தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்தியாவில் வெறும் 2 ஓமிக்ரான் கேஸ்கள் மட்டுமே இருந்தது. கர்நாடகாவில்

Read More

2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Posted by - November 9, 2021

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்ககடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Read More

சென்னை : நேப்பியர் பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்று கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்!

Posted by - August 11, 2021

சென்னையின் அடையாளங்களுடன் ஒன்று நேப்பியர் பாலம். இந்தப் பாலத்தில் ஏராளமானவர்கள் செல்ஃபி எடுப்பதுண்டு. இந்தநிலையில் நேற்று மாலை ஒருவர் பாலத்தில் செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது அவர் கால் தவறி கூவம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரின் கையிலிருந்த செல்போனும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. கூவம் ஆற்றுக்குள் சிக்கிய அவரால் வெளியில் வர முடியவில்லை. மேலும் அந்த இளைஞர் விழுந்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அதனால் இரவு முழுவதும் அவர் கூவம் ஆற்றுக்குள்ளேயே தவித்திருக்கிறார். இந்தநிலையில் இன்று காலை நேப்பியர் பாலம் வழியாக

Read More

சென்னையில் கொரோனா சிகிச்சையளிக்க தயாராகும் மசூதி – அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறலாம்!

Posted by - May 11, 2021

சென்னையில் அதிகளவில் பரவும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக சென்னை அண்ணா நகரில் இருக்கும் பள்ளிவாசலை முழுமையாக கொரோனா சிசிச்சை மையமாக மாற்ற அந்த பள்ளியின் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து உள்ளது. இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டியுள்ள படி செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது. முற்றிலும் இலவச சேவையாக இயங்க உள்ள

Read More

சென்னையர்களை தனிமைப்படுத்துங்கள்!

Posted by - May 7, 2021

வேகமாக பரவி வரும் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கம் சென்னையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வியாபாரம், கல்விக்காக சென்னை சென்ற அதிரையர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக நோய் பரவும் ஊர்களில் இருந்து இதர ஊர்களுக்கு செல்வதை தடுத்து இஸ்லாமிய தூதர் அறிவுரை கூறி இருக்கிறார்கள். இதனை செவி ஏற்காத சில சுயநல நபர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகுகிறார்கள். அப்படி வருபவர்களில்

Read More

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி!

Posted by - May 2, 2021

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக

Read More

பாஜகவுக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட குவிந்த வடமாநிலத்தவர்கள்? பதற்றத்தில் துறைமுகம்!

Posted by - April 6, 2021

சென்னை துறைமுகம் தொகுதியில் வடமாநில இளைஞர்களை அழைத்து வந்து பாஜக சார்பில் கள்ள ஓட்டு போட முயற்சி நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் பிராட்வே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று பிற்பகலில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டமாக வந்துள்ளனர். அவர்களைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த ஏரியா மக்கள் யார் நீங்கள், உங்களை இதற்கு முன்பு

Read More

மிரட்டும் நிவர் – மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வர தடை !

Posted by - November 25, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக இன்று இரவு 8 மணிக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Read More

CYCLONE NIVAR : தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை அறிவிப்பு !

Posted by - November 25, 2020

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலால் நாளை வரை கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. நிவர் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர

Read More

மதியம் 12 மணிக்கு திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி !

Posted by - November 25, 2020

சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கனஅடி திறக்கப்பட உள்ளது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்றும், ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)