CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - September 8, 2021

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் CAA சட்டத்தை

Read More

CAA – ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களிப்பு.. சட்டசபையில் வக்காலத்து.. தற்போது எதிர்க்கும் அதிமுக !

Posted by - March 15, 2021

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்டம். இந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டும் இந்திய குடியுரிமை கோரி எந்த ஆவணங்களும் இல்லாமலேயே விண்ணப்பிக்க முடியும். அதாவது இஸ்லாமியர்கள் தவிர்த்த இதர மதத்தினர் மட்டும் இந்திய குடியுரிமை பெற முடியும். மேலும் அஸ்ஸாமில்

Read More

CAA நிச்சயம் திரும்ப பெறப்படாது – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி !

Posted by - March 15, 2021

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், பாஜக தொடர்ந்து சிஏஏ-வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலை இந்த முறை பாஜத, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து அதிமுக எதிர்கொள்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இலவச

Read More

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !

Posted by - March 14, 2021

நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மேலும் 5 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதாக அக்கட்சி அறிவித்தது. அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு திமுக அழுத்தமான குரல் கொடுக்கும்

Read More

டெல்லி மாணவி சஃபூரா ஜர்கருக்கு ஜாமீன் !

Posted by - June 23, 2020

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவியுமான சஃபூரா ஜர்கர், கடந்த ஏப்ரல் மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கர்ப்பிணி பெண்ணான இவரின் கைதிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மாணவி சஃபூரா ஜர்கரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் எந்தவித போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாணவி சஃபூரா ஜர்கருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Read More

அதிரையில் ட்ரெண்டாகி வரும் NO CAA, NRC, NPR மாஸ்க் !(வீடியோ)

Posted by - May 13, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோரை மத்திய அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நாடே கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வரும் நிலையில், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண் சபூரா

Read More

வங்கியில் பணம் எடுக்க அனுமதிக்காததை கண்டித்து மதுக்கூரில் சாலை மறியல் !(படங்கள்)

Posted by - March 19, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மதுக்கூர் இந்தியன் வங்கியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பெண்கள் அதிகளவில் கூடியதால் வங்கி நிர்வாகம் வங்கியை இழுத்து மூடியது. ஆனால் பொதுமக்கள், மாலை 4 மணி வரை பணம் எடுக்க காத்திருந்தனர். இருந்தும் வங்கி நிர்வாகம்

Read More

தஞ்சையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் !(படங்கள்)

Posted by - March 17, 2020

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, MGR சிலைகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனாவை காரணமாக வைத்து போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் வேளைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை கீழவாசலில் நடைபெற்று வரும் சாகீன்பாக் போராட்டத்திலிருந்து பேரணியாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளிடம்,

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 14, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் தங்ககுமரவேல்தமிழக மக்கள் விடுதலை இயக்கம், பொதுச்செயலாளர். கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் மைளலானா. ஹைதர் அலி கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 13, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 24ம் நாள் (13/03/2020) அரங்கில், மன்னை செல்லச்சாமி, மாநில துணைபொதுச்செயலாளர், மஜக நெல்லை முபாரக், மாநில தலைவர், SDPI மௌலானா. சம்சுதீன் காஷிமி, முன்னாள் மக்கா பள்ளி தலைமை இமாம், சென்னை ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)