சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா ? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!
கொரோனா தடுப்பூசிகள் விவகாரம், சமூக ஊடகங்களில் உதவிகள் கோரினால் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றை முன்வைத்து சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பியுள்ளது. கொரோனா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்- முன்வைத்த விமர்சனங்கள் : கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாட்டில் மத்திய அரசு என்னதான் பங்களிப்பு செய்துள்ளது ?