கங்கையில் மிதக்கும் பிணங்கள்! பழிபோடும் பீகார் பழிபோகும் உத்தரப்பிரதேசம்!
இந்து மதத்தின் மிக முக்கியப் புண்ணிய நதியான கங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பீகார் மாநிலம், பக்ஸர் மாவட்டம், சௌசா கிராமத்தின் மகாதேவ் கட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் பல உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. உத்தரப்பிரதேச மாநில எல்லையிலுள்ள பக்ஸர் மக்கள், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை இவ்வாறு கங்கையில் தள்ளிவிடுகின்றனர்’’ எனக் குற்றம்சாட்டினர். கொரோனா சிகிச்சைக்குத்