ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டினர் – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பகீர் !
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு தனது வீட்டுக்கு நேரடியாக வந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுக்க வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு சென்று பணம் கேட்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி சில தினங்களுக்கு முன்பாக