ஆவடி : உன்னதமான பணியில் தமுமுகவினர்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு இல்லாத உயிர் இழப்புகள் 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், ஊடங்கை தமிழக அரசு அமல்படுத்தி தொற்றை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் உன்னதமான சேவையை பல்வேறு அமைப்புகளும்