குவைத்தில் அதிரையர் மரணம்!

Posted by - May 25, 2020

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோடு மர்ஹூம் மு.அ. அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜூதின், கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், J. நெய்னா முஹம்மத் அவர்களின் மாமனாரும், AH அஹமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஹக்கீம் அவர்கள் குவைத்தில் 25.05.20 இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

ஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

Posted by - May 24, 2020

இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக

Read More

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

Posted by - May 23, 2020

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Read More

அதிரை பைத்துல்மாலில் ஆதவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!(படங்கள்)

Posted by - May 23, 2020

அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் S.பர்கத், செயலாளர் S.A.அப்துல் ஹமீது, பொருளாளர் S.M.முகமது முகைதீன் ஆகியோருடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு புடவை ஒன்றும் ஜாக்கேட் துணியும் வழங்கினார்கள்.

Read More

அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)

Posted by - May 23, 2020

அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அந்த பாம்பை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 7 நீளமுள்ள மலைப்பாம்புகள் ஊர்ந்துசெல்வதையும் இப்ராகிம் கண்டிருக்கிறார்.

Read More

வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த தமுமுக : அதிரை வியாபாரிகள் மகிழ்ச்சி!!

Posted by - May 21, 2020

கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர். ஊரடங்கின் போது வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படது. அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதியிருந்த போது சிலர் அந்த நேரங்களை தாண்டியும் கடைகளை திறந்ததால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சிறுகுறு வர்த்தகங்கள் முடங்கின. இதனையடுத்து அதிரை

Read More

அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

Posted by - May 19, 2020

அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து ரூ.50 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் வாய்-மூக்கு கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வாய்-மூக்கு கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிரையிலிருந்து வெளியேற்றப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் !(படங்கள்)

Posted by - May 19, 2020

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பலரின் கவனத்தை பெற்றது. இதனால் தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிரையிலும் தங்கி

Read More

அதிரையில் கொரொனா முன்னெச்சரிக்கைக்கு அடைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்!(படங்கள்)

Posted by - May 18, 2020

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில் தெரு சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று (18-05-2020) வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அகற்றினர். அப்போது அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.எஸ்.அன்பரசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் திரு.செல்வம்

Read More

அதிரையில் ஐஸ்கட்டி மழையா ? வதந்திகளை நம்பாதீர்!

Posted by - May 17, 2020

வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு  புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்புயல் 20ம் தேதி புவவேஸ்வரில் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் இப்புயலின் தாக்கம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இரவு 9.45 மணியளவில் அதிரை கடற்கரைத்தெருவில் ஐஸ்கட்டி மழை பெய்வதாக அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் வீடியோ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)