அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!
அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து ரூ.50 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் வாய்-மூக்கு கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வாய்-மூக்கு கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.