சுற்றுசூழல் மன்றம் 90.4கின் ஆலோசனை கூட்டம் மற்றும் அதன் முடிவுகள்..!
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.03.2018) மதியம் 1.00 மணிக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுசூழல் மன்ற தலைவர்.வ.விவேகானந்தம் மற்றும் செயலர்.எம்.எப்.முஹம்மது சலீம் தலைமை தாங்கினர் தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி தூய்மைத்தூதுவர்கள் ஜாஹீர்,அஃப்ரீத்கான்ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் அதிரை பேரூராட்சி பகுதியில் குப்பைகள் அதிகம் இருக்கும் இடங்களும் , பேரூராட்சியின் குப்பைக்கிடங்கும் பார்வையிட்டனர். குப்பைக்கிடங்கில் குப்பைகள் வாசல் வரை நிரம்பி வந்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி நடைபெறவில்லை.