திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரானார் எஸ்.எச். அஸ்லம்!

Posted by - September 28, 2022

திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக அதிரையைச் சேர்ந்த எஸ்.எச். அஸ்லம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2011-16 வரையிலான காலகட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தஞ்சை தெற்கு மா.செ.வானார் கா. அண்ணாதுரை MLA – திமுக தலைமை அதிரடி!

Posted by - September 28, 2022

திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய மா.செ. வாக கா. அண்ணாதுரை எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சை

Read More

அதிரையில் ஆயிரக்கணக்கானோர் கைது! RSS அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல்!!

Posted by - September 28, 2022

தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து துவங்கிய பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று பேருந்து நிலையம் நோக்கி சென்றனர். அப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, போராட்டத்தில்

Read More

அதிரையில் நாளை அநீதிக்கு எதிரான போராட்டம் – அலிம் அல் புகாரி கண்டன உரை நிகழ்த்துகிறார் !

Posted by - September 28, 2022

பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறார்கள். NIA இலாக்கவை தவறாக பயன்படுதேதி இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து அதிரை பேரூந்து நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கஙகள் ஒன்றினைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார்கள். இதில் இந்திய காங்கிரஸ் கட்சியின் அலிம் அல் புகாரி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)