தடதட ரோடால் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள் : கண்டு கொள்வாரா 12வது வார்டு திமுக கவுன்சிலர்..?

Posted by - September 13, 2022

அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்சாலை சிதிலமடைந்து கருங்கற்களாக சிதறிக்கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட இந்த தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, மழைக்காலங்களில் மீதமிருக்கும் கருங்கற்களும் பெயர்ந்து வருவதால் இந்த சாலை மிகவும் கரடுமுரடானதாகவும் இவ்வழியே பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஒருவர்

Read More

அதிரை மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை! கடுப்பான கம்யூனிஸ்ட்!! விரைவாக செயல்பட வலியுறுத்தல்!

Posted by - September 13, 2022

அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அடிக்கடி ஏற்படும் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகளை அதிரை துணை மின் நிலைய பணியாளர்கள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல சதாப்தங்களாக தொடர்கிறது. இந்நிலையில், துணை மின் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் இந்திய

Read More

மரண அறிவிப்பு (காலாவை ஜமாலுதீன் அவர்கள்)!

Posted by - September 13, 2022

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மீராலெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சாலீஹ் அவர்களின் மருமகனும், மர்ஹும் அல்தாஃப், சம்சுதீன், இமாமுதீன் ஆகியோரின் தகப்பானாருமான ஜமாலுதீன் அவர்கள் இன்று(13/09/22) அன்னாரின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(13/09/2022) 4:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Read More

அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர் பகுதிகளுக்கான மின்தடை அறிவிப்பு!

Posted by - September 13, 2022

மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)