அதிரை ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லா 583 ம் ஆண்டு கந்தூரி விழா : முக்கிய வீதிகளுக்குள் வரும் ஊர்வலம்!!

Posted by - August 28, 2022

அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இன்று 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கடற்கரைத் தெரு தர்காவில் இருந்து புறப்படும் கந்தூரி விழா ஊர்வலம் அதிரையில் உள்ள முக்கிய வீதிகளுக்குள் வர உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நடைபெறும் இந்த கந்தூரி விழா ஊர்வலம், கந்தூரி ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை

Read More

மரண அறிவிப்பு-வாய்க்கால் தெரு முகம்மது தாயார்.

Posted by - August 28, 2022

வாய்கால் தெருவை சார்ந்த மர்ஹும் வ.மீ ஹாஜா மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹும் உ.அ.மு செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், முகம்மது அபூபக்கர்,ஜமால் முஹம்மது,சாதுலி, சாஹுல் ஹமீது ஆகியோரின் தாயாரும், மர்ஹும் பஷீர் அகமது,கிஜார் முகம்மது ,முஹம்மது ஜஃபர், ஹபீபு ரஹ்மான் இவர்களின் மாமியாருமான முகம்மதுத்தாயார் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று ழுகர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போம்.

Read More

அதிரையில் இன்று தொடங்குகிறது தஞ்சை மாவட்ட இஜ்திமா!

Posted by - August 26, 2022

தப்லீக் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெற உள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் இஜ்திமாக்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இஜ்திமா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெறுகிறது. அதிரை பெரிய ஜுமுஆ பள்ளிவாசலில் இன்று அஸர் முதல் நாளை இஷா வரை நடைபெற உள்ள இந்த இஜ்திமாவில் தலைசிறந்த உலமாக்கள் சொற்பொழிவாற்ற உள்ளனர். மேலும் தஞ்சை

Read More

செகந்திராபாத்-ராமேஸ்வரம் ரயிலில் அதிரை வந்த பயணிகளுக்கு ரோட்டரி சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு!

Posted by - August 26, 2022

செகந்திராபாத் – ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது. அதிரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை, பல்வேறு தரப்பினரும் சிறப்பான முறையில் வரவேற்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், ரயிலை வரவேற்கும் விதமாக ரயிலில் வந்திறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன் இசட்.

Read More

அதிரை வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் – அதிரையர்கள் உற்சாக வரவேற்பு!(படங்கள்)

Posted by - August 25, 2022

செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை

Read More

சென்னை ரயில் நிலையத்தில் அதிரையர்கள் உற்சாகம் !

Posted by - August 25, 2022

செகந்திராபாத் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – மாயவரம்- திருவாரூர் அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. 16ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்படும் முதல் ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணிக்க ஏராளமான அதிரையர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Read More

மரண அறிவிப்பு- நெ.மு.க அஹமது இப்ராஹிம் (வாய்க்கால் தெரு)

Posted by - August 25, 2022

வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் நெ.மு.க. முஹம்மது அப்துல்லா அவர்களுடைய மகனும் நெ.மு.கா அப்தூல்காதர் அவர்களுடைய சகோதரரும் நெ.மு.க அகமது ரசீது அவர் மைத்துனரும் அஷ்ரப், ரபீக் அவர்களுடைய தகப்பனாருமாகிய நெ.மு.க அஹமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாஃத் ஆகிவிட்டார்கள் .. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னரின் ஜனாஸா இன்று பகல் 1 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக.

Read More

மரண அறிவிப்பு : ஆபிதா அம்மாள் அவர்கள்!

Posted by - August 24, 2022

புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அமு முஹம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் ASM சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், S. சேக் மதினா அவர்களின் மனைவியும், சம்சுதீன், ஹாஜா நஜ்முதீன், அப்துல் ஜப்பார், சரபுதீன், அப்துல் ஹமீது, நிஜாமுதீன், அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரியும், ஜமால் முகம்மது அவர்களின் கொழுந்தியாவுமாகியஆபிதா அம்மாள் அவர்கள், நேற்று இரவு(23/04/2022) ஸ்டேட் பேங் எதிரிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

மரண அறிவிப்பு : சாகுல் ஹமீது அவர்கள்!

Posted by - August 23, 2022

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல்ஹசன் அவர்களுடைய பேரனும், கூத்தாநல்லூரை சேர்ந்த கறிக்கடை ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனும் நாகூர் பிச்சை அவர்களுடைய மருமகனும், இக்பால் அவர்களுடைய சகலையும், ஹாரிஸ் அவர்களுடைய மச்சானும், மாலிக், ஜெஹபர் சாதிக், முஹம்மத் அசன் ஆகியோருடைய சகோதரருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இன்று(23/08/22) மாலை பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (24/08/22) காலை 10:30 மணியளவில் தக்வா

Read More

அசைந்தாடும் காற்றோடு அடித்து நொறுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!

Posted by - August 22, 2022

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22.08.2022 , 23 , 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் அதிரையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர் காற்றும் வீசத் தொடங்கி அடுத்த சில நிமிடங்களுக்குள் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)