அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றியாளர்கள் பரிசுகளை பெற முன்பதிவு துவக்கம்!

Posted by - July 31, 2022

கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன. இதற்கான மூன்று இலக்க பதிவு எண்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பரிசுகளை பெற வெற்றியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அதன்படி கீழே

Read More

அதிரை வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

Posted by - July 30, 2022

செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி

Read More

பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக பிரித்விராஜ் சவுகான் பொறுப்பேற்பு!

Posted by - July 29, 2022

பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் பட்டுக்கோட்டை சரக புதிய காவல் துணை கண்காணிப்பாளராக(டிஎஸ்பி) பிரித்விராஜ் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரித்விராஜ் சவுகானுடன் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 4 டிஎஸ்பி-க்கள் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

மரண அறிவிப்பு : முகம்மது யூசுப் அவர்கள்!

Posted by - July 29, 2022

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த துவர்பாக்கு M.A. முகைதீன் ஹாஜியார் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் உ.அ.மு சரீப் அவர்களின் மருமகனும், அப்துல் காதர், ஹாரூன் ரஷீத் ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன், முகம்மது ஆகியோரின் மாமனாரும், அப்துல் சுக்கூர் அவர்களின் தகப்பனாருமாகியமுகம்மது யூசுப் அவர்கள் இன்று காலை(29/07/2022) சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(29/07/2022) ஜுமுஆ தொழுகைக்குப் பின் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

மரண அறிவிப்பு : E.M. இபுராஹீம் அவர்கள்!

Posted by - July 28, 2022

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் போலீஸ் நாநா அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் சகலையும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும், மர்ஹூம் ராஜிக் அஹமது, மௌலவி ஜாஹிர் ஹுசைன், ஹாஜா ஜய்னுத்தீன் ஆகியோரின் சாச்சாவும், ஜனுக் அஹமது அவர்களின் மாமனாரும், முஹம்மது அசாருதீன், மாஹிர் ஆகியோரின் அப்பாவும், மௌலவி ஹைதர் அலி அவர்களின் தகப்பனாருமாகிய ஈனா காகா என்கின்ற E.M.

Read More

TNTJ நடத்தும் மாபெரும் பெண்கள் இஜ்திமா!!

Posted by - July 28, 2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் இஜ்திமா 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் எதிர்புறம் உள்ள M.R. மண்டபம் அருகில் நடைபெற உள்ளது. இந்த பெண்கள் இஜ்திமாவிற்கு TNTJ பேச்சாளர் அபூபக்கர் சித்தீக் ஸஆதி, TNTJ மாநில செயலாளர் தாவூத் கைஸர், M.பரக்கத் நிஷா ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த பெண்கள் இஜ்திமா இரவு 9

Read More

மரண அறிவிப்பு: ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு அவர்கள்!

Posted by - July 26, 2022

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.வா.மு.அபூபக்கர் சாகிபு அவர்களின் மகனும், அ.வா.மு.அஹம்மது, அ.வா.மு அபூபக்கர் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது முகைதீன், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மா.மு சம்சுதீன், ஹாஜி எஸ்.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், செ.இ.மு.முகமது புகாரி, செ.இ.மு.முகமது சம்சுதீன் ஆகியோரின் மச்சானுமாகிய ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு அவர்கள் இ‌ன்று(26/07/22) காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/07/22)

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி! நிர்வாகத்திடம் ஊக்க பரிசுகள் கையளிப்பு!!

Posted by - July 26, 2022

கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன. இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் தேர்வானவர்களுக்கு வழங்குவதற்கான ஊக்க பரிசுகளை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் ஹாஜா முகைதீனிடம் Terri wear நிர்வாக இயக்குநர்

Read More

போராட்டகளமாகும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி?

Posted by - July 25, 2022

அதிரையின் அறிவொளி சுடராக திகழும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு பிரதான நுழைவாயில் வளைவில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது கல்லூரியின் வரலாற்றை சிதைக்கும் செயல் என கூறி கடந்த மே மாதம் அதிரை காவல் நிலையத்தில் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தாளாளர் முகமது அஸ்லம் புகார் அளித்தார். அதனடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் MKN மதரஸா டிரஸ்டின்

Read More

அரசு வேலைக்கான இன்றைய தேர்வில் பங்கேற்கும் அதிரையர்கள்! பிராத்தனை செய்ய வலியுறுத்தல்!!

Posted by - July 24, 2022

தமிழகம் முழுவதும் தமிழக அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC க்ரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் அதிரையில் இயங்கி வரும் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறும் 14 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளார்கள். இவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)