அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!

Posted by - June 30, 2022

அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று  மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குதிசை காற்றின்

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - June 30, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (30.06.2022) வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை தோல் சிறப்பு சிகிச்சையில் தங்க பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதிபா சுரேந்திரன் MBBS., DDVL. Dermatology & Cosmetology வருகை தர உள்ளார்.இந்த மருத்துவ முகாமில், படர்தாமரை, சொரியாசிஸ், முகப்பரு, முடி

Read More

அத்துமீறிய அதிரை நகராட்சி! லெஃப்ட் ரைட் வாங்கிய ரயில்வே போலிஸ்!

Posted by - June 30, 2022

குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் பேய் கதைகளை சிறுவயதில் நாம் கேட்டிருப்போம். அத்தகைய சூழலில் தான் தற்போது அதிரை நகராட்சி உள்ளது. வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் சேகரித்த குப்பையை டிராக்டரில் ஏற்றி வைத்துக்கொண்டு எங்கு கொட்டுவது என தெரியாமலும், எப்படி மறுசுழற்சி செய்வது என்று புரியாமலும் திக்குமுக்காடி நிற்கிறது அதிரை நகராட்சி. வண்டிப்பேட்டை குப்பை கிடங்கு நிரம்பிய உடனே ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே ஈசிஆர் சாலையோரம் குப்பையை அதிரை

Read More

அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!

Posted by - June 30, 2022

அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ஆரம்பம் செய்யப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, அதிரை மட்டுமல்லாது வெளி ஊரிலிருந்து வந்த உலமாக்கள் புஹாரி ஷரீஃப் ஓதினர். பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)