தக்வா பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் கடை வைத்திருப்போர் வாடகையை உடனே செலுத்த வேண்டும் – வக்பு வாரியம் நோட்டீஸ் –
துலுக்காப்பள்ளி டிரஸ்ட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட மஸ்ஜித் தக்வா பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக வக்பு வாரிய கட்டுப்பாட்டில் இயங்க கூடிய இப்பள்ளிக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. பள்ளியை நிர்வகித்த முன்னாள் நிர்வாகிகள் சிலரின் கவன குறைவு காரணமாக தனியார்கள் பலர் நிலத்தை அபகரித்து போலியான ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு கிரயம்.செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியின் நிர்வாகம் சார்பில் நிலங்களை கையகப்படுத்த தொடுத்த வழக்கில் பள்ளிக்கு சாதகமான தீர்ப்பை