சாலை வடிகால் வசதியின்றி அவதிப்படும் அம்பேத்கர் நகர் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா அதிரை நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் (இரண்டாவது வார்டு) மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாத போதே அவ்வப்போது பேரூராட்ச்சியால் எங்களின் பகுதி கவனிக்கப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் கவனிக்கப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள். எல்லாரையும் போல நாங்களும் வரி கட்டுகிறோம். ஆனால் மாற்றாந்தாய் பிள்ளையாக எங்கள் பகுதியை நகராட்சி கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100வீடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும் இப்பகுதியில் முறையாக வடிகால் வசதியை இன்று