அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!

Posted by - June 30, 2022

அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று  மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குதிசை காற்றின்

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - June 30, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (30.06.2022) வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை தோல் சிறப்பு சிகிச்சையில் தங்க பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதிபா சுரேந்திரன் MBBS., DDVL. Dermatology & Cosmetology வருகை தர உள்ளார்.இந்த மருத்துவ முகாமில், படர்தாமரை, சொரியாசிஸ், முகப்பரு, முடி

Read More

அத்துமீறிய அதிரை நகராட்சி! லெஃப்ட் ரைட் வாங்கிய ரயில்வே போலிஸ்!

Posted by - June 30, 2022

குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் பேய் கதைகளை சிறுவயதில் நாம் கேட்டிருப்போம். அத்தகைய சூழலில் தான் தற்போது அதிரை நகராட்சி உள்ளது. வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் சேகரித்த குப்பையை டிராக்டரில் ஏற்றி வைத்துக்கொண்டு எங்கு கொட்டுவது என தெரியாமலும், எப்படி மறுசுழற்சி செய்வது என்று புரியாமலும் திக்குமுக்காடி நிற்கிறது அதிரை நகராட்சி. வண்டிப்பேட்டை குப்பை கிடங்கு நிரம்பிய உடனே ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே ஈசிஆர் சாலையோரம் குப்பையை அதிரை

Read More

அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!

Posted by - June 30, 2022

அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ஆரம்பம் செய்யப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, அதிரை மட்டுமல்லாது வெளி ஊரிலிருந்து வந்த உலமாக்கள் புஹாரி ஷரீஃப் ஓதினர். பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு

Read More

அதிரையில் நாளை துவங்குகிறது புஹாரி ஷரீஃப் : ஆவலுடன் அதிரையர்கள்!!

Posted by - June 29, 2022

அதிரையில் 75 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை (30.06.2022) வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடூர கொரோனாவின் பிடியில் தமிழக மக்கள் தவித்து வந்த வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததன் காரணத்தினால் இந்த வருடம் மீண்டும் அதிரையில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர்

Read More

நீர்… நிலம்.. காற்று! மாசுபடுத்தும் அதிரை நகராட்சி!! பதறும் மக்கள்! துயர் துடைப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்?

Posted by - June 29, 2022

அதிரை நகராட்சிக்கு சொத்து, வியாபாரம் உள்ளிட்டவற்றிற்கான கப்பங்களை நாள் தவறாமல் மக்கள் கட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை கொண்டு திறன்மிக்க நிர்வாகத்தை வழங்க முடியாமல் நகராட்சி திணறி வருவதாக பேசப்படுகிறது. இவற்றிற்கு சான்றாக திடக்கழிவு மேலாண்மையில் அதிரை நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிடலாம். வண்டிப்பேட்டை அருகே உள்ள குப்பை கிடங்கு நிரம்பிவிட்டது என்பதற்காக ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஈசிஆர் சாலை ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே குப்பைகளை கொட்டியது நகராட்சி. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட மக்கள், ஒரு கட்டத்தில் குப்பைகளை

Read More

SSMG கால்பந்து தொடர் : பள்ளத்தூரை பதம் பார்த்த திருச்சி!!

Posted by - June 28, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் BALU MEMORIAL திருச்சி – THENNARASU பள்ளத்தூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் ஆரம்பத்திலிருந்தே திருச்சி அணி ஆதிக்கம் செலுத்தியது. திருச்சி அணியில் ஆதிக்கத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பதபதைத்த பள்ளத்தூர் அணிக்கு எதிர்பாரா விதமாக கிடைத்த வாய்ப்பை

Read More

தமுமுக,மமக அதிரை கிளை தொண்டரணி நிர்வாகிகள் நியமனம் !

Posted by - June 28, 2022

அதிராம்பட்டினம் தமுமுக,மமக கிளையின் தொண்டரணி புதிய நிர்வாகிகள் தேர்வு அதன் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதில் தொண்டரணியின் நகர செயலாளராக S.ஜெஹபர் சாதிக் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். துணை செயலாளராக இப்ராஹிம்ஷா மற்றும் சகாபுதீன் பொருளாளராக சகாபுதீன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Read More

அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு மனிதம் விருது!

Posted by - June 27, 2022

அதிரை ராயல் ஹாஸ்பிடாலிட்டியில் நடைபெற்ற ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில், அதிரை சுற்றுவட்டார மக்களுக்கு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கட்டணமின்றி வழங்கும் அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு( Adirai Unity Welfare Association) சேவையை பாராட்டி மனிதம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Read More

SSMG கால்பந்து தொடர் : ‘டை – பிரேக்கரில்’ காயல்பட்டினம் அணி வெற்றி!!

Posted by - June 27, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் காயல்பட்டினம் – புதுக்கோட்டை அணியை எதிர்கொண்டது. போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணிகளும் கோல் அடித்து முன்னிலை பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் இறுதி வரை பலனளிக்காமல் போனதையடுத்து ஆட்டம் சமநிலையடைந்ததால் ‘டை – பிரேக்கர்’ முறை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)