இது நவீன நீர்வழி பாதையல்ல!! அதிரையின் பிரதான சாலை!
அதிரை நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பிஸ்மி மெடிக்கல் முதல் அரசு மருத்துவமனை வரையில் உள்ள பிரதான சாலை பல்லாண்டுகளாக புனரமைக்கபடாததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்ல இந்த சாலையை தான் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், அவசர ஊர்தி , பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும், இரு சக்கர வாகனங்கள், லாரி போன்ற கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இச்சூழலில் சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக்கற்கள் காரணமாக அடிக்கடி பழுதடைவதோடு