பிறை செய்தி: நாளை மறுநாள் ஈகை திருநாள் – அரசு காஜி அறிவிப்பு .

Posted by - May 1, 2022

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை ரமலான் திருநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். 

Read More

மரண அறிவிப்பு: எம்.எஸ்.எஸ். பாத்திமா அவர்கள்!

Posted by - May 1, 2022

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.சா.அபூபக்கர் அவர்களின் மகளும், மு.வா.செ.முஹம்மது புஹாரி அவர்களின் மருமகளும், ஹாஜி எம்.பி.அபூபக்கர் அவர்களின் மனைவியும் எம்.பி.ஏ.முஹம்மது புஹாரி அவர்களின் தாயாரும், ஹாஜி எம்.எஸ்.எஸ்.அஹமது கபீர், எம்.எஸ்.எஸ்.அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி எம்.எஸ்.எஸ்.அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், எம்.எஸ்.எஸ்.சித்திக் முஹம்மது, எம்.எஸ்.எஸ்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.எஸ் முஹம்மது அஷ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய எம்.எஸ்.எஸ். பாத்திமா அவர்கள் இன்று(01/05/22) வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று(01/05/22) இரவு 10:30 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில்

Read More

மரண அறிவிப்பு – முகமது சாதிக் அவர்கள்!

Posted by - May 1, 2022

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும்,  மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி,  நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். 

Read More

உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது! -அதிரை சாகுல் ஹமீது

Posted by - May 1, 2022

SDTU தொழிற்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் “உழைப்போம்! ஒன்றிணைவோம் !!உரிமையை வென்றெடுப்போம்!!! உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது . உழைப்பாளியின் உரிமையைப் பாதுகாப்போம் பொதுத் துறைகள் தனியார் மயமாக்கலை புறக்கணிப்போம். ஜாதி மத பிரிவினை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம் சக்தி பெறுவோம். தொழிற்சங்கம் சார்பாக மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். குறிப்பிட்டுள்ளார்.

Read More

சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமியர்கள் ஜம்ஜம் நீரை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு PFI கோரிக்கை !

Posted by - May 1, 2022

கொரோனா நோய் தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் கடமையான புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடு செய்வதற்கு பிற நாட்டை சார்ந்தவர்கள் வருவதற்கு தடைவிதித்திருந்தது. தற்போது, இறை கடமைகளான உம்ரா மற்றும் ஹஜ் செய்வதற்கு பயணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரமலான் மாதத்தை முன்னிட்டு மக்கா நகரில் முஸ்லிம்கள் உம்ரா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் கணிசமான பயணிகள் உம்ரா என்ற புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை முடித்துவிட்டு திரும்பி

Read More

அதிரையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்ற இஃப் தார் நிகழ்ச்சி!

Posted by - May 1, 2022

அதிராம்பட்டினம் அல் நூருள் முஹம்மதியா சங்கத்திற்க்கு உட்பட்ட காலியார் தெரு மற்றும் வெற்றிலைக்காரத் தெரு நண்பர்கள் இணைந்து நடத்தும் 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை பிறை 28 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1000 மேற்ப்பட்ட நன்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)