அமீரகத்தில் பிறை தென்படவில்லை!

Posted by - April 30, 2022

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷவ்வால் பிறை சனிக்கிழமை காணப்படவில்லை என பிறை கமிட்டி தெரிவித்திருக்கிறது.. மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரமழானின் கடைசி நாளாகவும், திங்கள்கிழமை மே 2 ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இருக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறை கமிட்டி கூறியுள்ளது. அமீரகம் உள்ளிட்ட அரபுலகத்தில் இன்று பிறை தென்படவில்லை ஆதலால் 30 நோன்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்ற அதிரை சாதிக் சார்!

Posted by - April 30, 2022

அதிரை சி.எம்.பி லைனை சேர்ந்த முனைவர் O.சாதிக், காதிர் முகைதீன் கல்லூரியில் 18 ஆண்டுகளாக விலங்கியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பகுஜனா சாகித்யா அகாதமி சார்பில் டாக்டர்.ராதா கிருஷ்ணன் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கல்லூரி பணி காரணமாக கடந்த மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விழாவில் சாதிக் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தற்போது அந்த விருது சாதிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More

அதிரையில் அல்லோலப்படும் திமுக அதிருப்தி கூட்டணி! எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!!

Posted by - April 30, 2022

கூட்டணி தர்மம் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிரை நகர்மன்ற துணை தலைவர் பதவியை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து தட்டிப்பறித்து நகர செயலாளர் இராம.குணசேகரனிடம் ஒப்படைத்தனர். இதனால் திமுக கூட்டணியில் உருவான விரிசல் சிலரது சுய விருப்பு வெறுப்பால் பெரிதாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக நகர்மன்ற குழு உறுப்பினர்கள் நியமனத்தில் கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டும் பணியை திமுக அதிருப்தி நிர்வாகிகளும் கவுன்சிலர்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசி இருக்கும் இந்திய

Read More

அதிரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஸஹர் விருந்து!

Posted by - April 30, 2022

அதிரை நெசவுத்தெரு நண்பர்கள் சார்பில் அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கான ஸஹர் விருந்து வழங்கப்பட்டது. மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருந்துக்கு வந்திருந்த அனைவரையும் நெசவுத்தெரு நண்பர்கள் அன்போடு வரவேற்று உபசரித்து உணவு பரிமாறினர்.

Read More

சிறைவாசிகள் விடுதலைக்கு நீயே போதுமானவன் – அதிரை அல் அமீன் பள்ளியின் கதமுல் குர்ஆன் நிகழ்வில் சிறப்பு பிரார்த்தனை !

Posted by - April 29, 2022

அதிராம்பட்டினம் மெயின்ரோட்டிக் ஜாமிஆ அல் அமீன் பளளியில் இன்று கதமுல் குர்ஆன் எனும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது அதில் முகம்மது இத்ரீஸ் காஷிஃபி கலந்து கொண்டு மார்க்க சிறப்பு பயான் செய்தார். இதில் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Read More

பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வேண்டும் – ஜாஸ்மின் கமால் கோரிக்கை !

Posted by - April 29, 2022

ஏரிப்புரக்கரை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியான பிலால் நகரில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் இணைப்புகளுக்கு ஏற்ற மின் மாற்றிகள் இல்லாததை சுட்டிகாட்டி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்ததனர். அதனடிப்படையில் ஊராட்சி சார்பில் மின் வாரியத்திற்கு மனு அளித்தனர் அம்மனு மீதான நவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என 1 வது வார்டு உறுப்பினர்

Read More

அதிரை காவல்துறைக்கு ஷாக் கொடுத்த மின் கம்பி!!

Posted by - April 29, 2022

அதிரை சால்ட் லைனில் காவலர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் குடும்பத்தோடு தங்கி உள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் காவலர் குடியிருப்பின் முகப்பில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மின் வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு தான் அப்பகுதியில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக

Read More

ஹேண்ட் லக்கேஜ் தவறவிட்ட அதிரையர்! கண்டெடுத்தால் ஒப்படைக்க வேண்டுகோள்!

Posted by - April 28, 2022

அதிராம்பட்டினம் சேர்ந்த நபர் 25/4/22 அன்று சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார். சென்னையில் இருந்து அய்யம்பேட்டை , கண்டியூர் , பட்டுக்கோட்டை பைபாஸ் வழியாக அதிராம்பட்டினம் காரில் வந்தடைந்தார். காரில் பின் கதவு பழுதால் அவரது ஹேண்ட் லக்கேஜ் தவரவிட்டனர். இந்த நிகழ்வு அதே நாளில் சரியாக மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை உள்ள நேரத்தில் தவரவிட்டுள்ளோம் தகவல் தெரிவித்தனர். அதில் விலை உயர்ந்த லேப்டாப் மொபைல் போன்ற பொருட்கள்

Read More

வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அதிரையர்!

Posted by - April 28, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் அதிரையை சேர்ந்த ஜம்ஜம் அஷ்ரஃப் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று அசத்தினார்.

Read More

மரண அறிவிப்பு(நடுத்தெரு முகம்மது மரியம்)

Posted by - April 28, 2022

. நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு.ஷாஹுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் A.J. ஹிதாயத்துல்லாஹ், A.J. அப்துல் ஹக்கீம், A.J.தமீம் அன்சாரி, A.J.அப்துல் பரக்கத் ஆகியோரின் தாயாரும் வா.ச.முகம்மது இப்ராஹிம், M.B. அகமது அஷ்ரஃப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முகமது மரியம் அவர்கள் தட்டாரத்தெரு இல்லத்தில் இன்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)