மரண அறிவிப்பு :(அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த அபுல்ஹசன் ஹாஜியார்)

Posted by - February 28, 2022

நடுத்தெரு கீழ்புறம் மோட்டு கொள்ளையை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ அபூபக்கர்,முஅ. முஹம்மது சாலீஹ்,மர்ஹும் முஅ அப்துல் வகாப்,மர்ஹும் முஅ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் ஹாஜி செ கு நெ சேக் முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி M ஹிதாயத்துல்லாஹ்வின் மாமனாரும்,மர்ஹும் சம்சுதீனின் தகப்பனாரும் அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்,இன்று ழுகர் தொழுகைக்கு பின்னர் தக்வா

Read More

நேரடி களத்தில் அதிரை பெண் கவுன்சிலர்!

Posted by - February 28, 2022

அதிரை 12 மற்றும் 13வது வார்டு மக்களுக்காக SDPi – இம்தாத் இந்தியா இணைந்து மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடத்தியது. வாய்க்கால் தெருவில் உள்ள நகர SDPi அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக முகாம் நடைபெறும் அலுவலகத்திற்கு சென்ற 13வது வார்டு SDPi கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வந்திருந்த மக்களின் படிவங்களை தாமே பூர்த்தி

Read More

ESC நடத்திய சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற அதிரை AFFA அணியினர்.!

Posted by - February 27, 2022

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) நடத்திய சிறுவர்களுக்கான U13 கால்பந்து தொடர் இறுதி போட்டியில் காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது, அதில் அதிரை AFFA அணியினரும், ஒரத்தநாடு YBR அணியினரும் பங்கேற்றனர், இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில்அதில் ட்ரை பிரேக்கர் முறையில் AFFA அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.

Read More

அதிமுக ஆட்சியிலேயே அதிகாரிகளை ஆட்டிப்படைத்த அதிரையின் ஆற்றுநீர் நாயகன்! இந்த ஆட்சியில் பட்டையை கிளப்புவாரா?

Posted by - February 27, 2022

2011ம் ஆண்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிரை பேரூராட்சி மன்ற தலைவராக பணியை துவங்கினார் S.H.அஸ்லம். அப்போது மாநிலத்தில் அதிமுக-வின் ஆட்சி. வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என பலரும் கூக்குரலிட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்தபோது, அஸ்லம் மட்டும் நிலத்தடி நீர்மட்டத்தை பற்றி யோசித்தார்.மாநில அரசின் உரிய ஒத்துழைப்பு இல்லாதபோதும் அதிரையின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அவர் கடும் முயற்சியை மேற்கொண்டார். குறிப்பாக இரவு நேரத்தில் இளைஞர் பட்டாளத்துடன் கிராமங்கள்தோறும் சென்று வாய்க்கால் உடைப்புகளை

Read More

அதிரை நகர சேர்மன் ஆகிறாரா N.K.S.சரீப்?

Posted by - February 27, 2022

நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19.02.2022 நடைபெற்று 22.02.2022 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிரை நகர்மன்றத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி வாகை சூடியது. இருப்பினும், அதிரை நகர்மன்ற சேர்மன் பதவிக்கு இன்னமும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், அதிரை திமு கழகத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து வரும் முகமது சரீப் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக சார்பில் தொடர்ந்து வெற்றியை தன்வசமாக்கி கொண்டிருக்கிறார். மேலும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுக்கோட்டை ஒன்றிய

Read More

சுகாதாரத்தை கையிலெடுத்த 24 வது வார்டு கவுன்சிலர் !

Posted by - February 27, 2022

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பல்வேறு பகுதியில் ஒரு சில வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏர்ப்பிற்கு முன்பே அவர்களின் பணிகளை முதன்மையாக செய்துவருகின்றனர். அதன் வரிசையில் அதிரையும் முதன்மை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அதிரை 24வது வார்டில் போட்டிட்ட அப்துல் மாலிக் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரின் தேர்தல் வாக்குறுதிகலில் முதன்மையாக சுகாதார பணிக்கு முன்னுரிமை கொடுத்து தற்பொழுது அந்த வார்டு முழுவதும் ஆங்காங்கே தேங்கி கிடக்கும்

Read More

அதிரையில் இருசக்கர வாகனத்தில் சிட்டாய் பறக்கும் சிறுவர்கள் ..!!

Posted by - February 27, 2022

அதிராம்பட்டினம் பகுதியில் பள்ளி படிக்கும் சிறுவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதும் பள்ளி முடிந்ததும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்வதும், ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர்,

Read More

அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!

Posted by - February 27, 2022

அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை அதிரையில் வீழ்த்தி 5 ஆண்டுகாலம் வனவாசம்போல் எந்த ஒரு அதிகாரமுமின்றி நகரமன்ற தலைவராக இருந்த தனக்கு தான் தலைவர் பதவியை தர வேண்டும் என ஒரு தரப்பு சமூக வலைதளங்களில் கூறி வருகிறது. அதேசமயம் அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து சண்டை சச்சரவுகளின்றி

Read More

அதிரை நகர்மன்ற தலைவிக்கு தயாராகிறது டாப் டக்கர் ஜீப்!

Posted by - February 26, 2022

அதிரை நகராட்சி மன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இந்தமுறை பெண்ணுக்கு மன்ற தலைமைதத்துவம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் அதிரை நகராட்சி மன்ற தலைவி யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் நகராட்சி மன்ற தலைவி நகர்வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய ஏதுவாக அந்த தலைவிக்கு என பிரத்யேக ஜீப் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிரை நகராட்சி ஆணையருக்கென தனி கார் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

SDPI – இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்

Posted by - February 26, 2022

SDPI மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம், நாளை(27/02/2022) காலை 10 மணி முதல் மாலை 6மணி வரை, வாய்கால் தெருவில் உள்ள SDPI நகர அலுவலகத்தில், 12 மற்றும் 13 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு முதற்கட்டமாக இம்முகாம் நடைபெறும் என்று SDPI அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். தேவையான ஆவணங்கள்: ஸ்மார்ட் கார்ட் ஜெராக்ஸ் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்ட் ஜெராக்ஸ் குடும்ப தலைவர் போட்டோ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)