அதிரை தேர்தல் களம்: அள்ளி கேட்ட முஸ்லீம் லீக்! கிள்ளி கொடுத்த திமுக!

Posted by - January 28, 2022

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சற்றுமுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக்கின் சார்பில் கோரப்பட்ட 5 வார்டுகளுக்கு பதிலாக 13 வது வார்டில் மட்டும் போட்டியிட ஒப்புதல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து நகர முஸ்லீம் லீக் சார்பில் ஊடக அணியின் செயலாளர் ஷாகுல் ஹமீது தெரிவிக்கையில், கூட்டணி கட்சியான திமுகவிடம் குறிபிட்ட சில வார்டுகளை குறிப்பிட்டு கடிதம் கொடுத்தோம். அதில் எங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில்,

Read More

அமீரகத்தில் இருந்து அதிரை வந்த நபர் மரணம்!

Posted by - January 28, 2022

காளியார் தெரு மர்ஹூம் மைதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் கவாஸ்கர் என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், முஹம்மது அஸ்லம் அவர்களின் சகோதரரும், மர்ஜூக் அவர்களின் மச்சானும் ஜஃப்ரான், இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது காசிம் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். மரணித்த அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமீரகத்தில் இருந்து அதிரைக்கு

Read More

அதிரையில் 20 வார்டுகளில் போட்டியிடும் SDPI!

Posted by - January 28, 2022

அதிரை நகராட்சி தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களைவிட இஸ்லாமிய சமூதாய கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஆதரவு அலை வீசுவதை உள்ளூர்வாசிகளின் பேச்சுக்கள் மூலம் கணிக்க முடிகிறது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை நகராட்சி தேர்தலில் 20 வார்டுகளில் போட்டியிட தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தள்ளிப்போகுமா அதிரை நகராட்சி தேர்தல்? வழக்கின் நிலை என்ன??

Posted by - January 28, 2022

அதிரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய கையோடு அவசர கதியில் வார்டுகளை மறுவரையரை செய்ததில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப 33 வார்டுகளை உருவாக்காமல் வெறும் 27 வார்டுகளுடன் அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில் அதிரை நகராட்சி வார்டு குளறுபடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் Z.முகம்மது தம்பி தொடுத்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)