அதிரை நகராட்சி தேர்தல்! சம்சுல் இஸ்லாம் சங்கத்தை சீண்டி பார்க்கும் உள்ளூர் புள்ளிகள்!!
அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றபோதும், மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் அவசர கதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வார்டுகள் மறுவரையரையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எல்லைகளை தீர்மானித்தத்திலும் குளறுபடிகள் நடந்துள்ளன. கடந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில்