அதிரையில் பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி, பெற்றோர்கள் ஒப்புதலை பெற்று செலுத்த வேண்டும் !
சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்- உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது. அதன்படி அதிராம்பட்டினம் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்றுகாலை மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சுகாதார அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர்.