அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !
தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !! தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை. இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம் நடத்தும் அவலம் நீடிக்கிறது. நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு பரவும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தேங்காய் ஓடு,டயர் போன்றவற்றில் நீர் தேங்கி இருக்கிறதா என ஆய்வு