வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துரைக்கும் பழைய சட்டை ! வீடியோ இணைப்பு.

Posted by - December 14, 2021

இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு விளகி இருப்பது? இவ்வாறான சூழலை எவ்வாறு கையாள்வது என்ற கோணத்தில் விளக்கம் தருகிறார் அதிரையை சேர்ந்த யூடிபர் சரன். வீடியோவை முழுமையாக காணுங்கள்… சந்தாதார் ஆகுங்கள் !

Read More

அவசர மருத்துவ உதவி வேண்டி.!

Posted by - December 14, 2021

அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் தன் கணவர் சாகுல் ஹமீதுடன் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக டெம்போ காலில் ஏறி விபத்து ஏற்பட்டது. இதில் இடது கால் பெருவிரல் துண்டிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. முதலில் செய்த அறுவை சிகிச்சையில் கால் விரல் சரிவர ஒட்டாததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பெருவிரலை

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - December 14, 2021

17.12.2021 வெள்ளிக்கிழமை அன்றுமருத்துவர்: Dr. மீனாட்சி வருகை19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்றுமருத்துவர்: Dr. M.குலாம் முஹ்யித்தீன்வருகை குறிப்பு: எங்கள் இணையதளத்தில் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை பற்றி செய்தியாக வெளியிடப்படும்

Read More

அதிரையில் 110KV துணை மின் நிலையத்தை விரைந்து அமைத்திடுக – அமைச்சரிடம் அதிரை நூவன்னா கோரிக்கை!

Posted by - December 14, 2021

அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார். குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவற்றையும், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட தனிநபர் கோரிக்கைகளையும் மக்கள் மனுக்களாக அளித்தனர். ஆயிரத்திற்கும் அதிகமாக மனுக்கள் இம்முகாம் வாயிலாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக, அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் நூவன்னா தனியே

Read More

அதிரை நகராட்சியை ஆளப்போவது யார்? தனித்து களம் காண்கிறது எஸ்.டி.பி.ஐ!!

Posted by - December 14, 2021

தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடி கடும் கடுப்பிலும் வெறுப்பிலும் உள்ளனர். இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணம்,

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மதா மரியம் அவர்கள்!

Posted by - December 14, 2021

ஆலடித்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு ஹாஜி முகைதீன் அப்துல்காதர்(வெங்காச்சி) அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் அவர்களின் சகோதரியும். நெய்னா முகம்மது, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மதா மரியம் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)