மல்லிப்பட்டிணத்தில் கட்டப்பட்டு ஒரேமாதத்தில் இடிந்து விழுந்த கழிவுநீர் வடிகால்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கடந்த மாதம் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலின் ஒரு புறம் சரிந்து விழுந்தது. மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்திட வேண்டும் என்பது வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் கடந்த கால கோரிக்கையாக இருந்தது.இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி தோராயமாக நாற்பது லட்சம் செலவில் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. நேற்று இரவு