சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி கட்டணம் – அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய அறிவிப்பு!
ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து விஷயங்களிலும் புகுத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த நிலையில், கல்வியிலும் ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இனி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி. கட்டணமாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன். அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், “அண்ணா