பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை.. தமிழக அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தவிர பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து