அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருள் வழங்கல்!

Posted by - November 3, 2021

அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த அவதிக்கு உள்ளான ஏரிபுறக்கரை மஸ்னி நகரில் உள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கைலி, போர்வை அடங்கிய பை பொதிகள் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. A. ஜமால் முகமது, முன்னாள் தலைவர்

Read More

மல்லிப்பட்டிணத்தில் கட்டப்பட்டு ஒரேமாதத்தில் இடிந்து விழுந்த கழிவுநீர் வடிகால்..!!

Posted by - November 3, 2021

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கடந்த மாதம் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலின் ஒரு புறம் சரிந்து விழுந்தது. மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்திட வேண்டும் என்பது வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் கடந்த கால கோரிக்கையாக இருந்தது.இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி தோராயமாக நாற்பது லட்சம் செலவில் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. நேற்று இரவு

Read More

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அதிரை – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!(படங்கள்)

Posted by - November 3, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த 17செ.மீ மழை காரணமாக அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், வடிகால்கள் தூர்வாரப்படாததாலும் மழைநீர், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரில் பிரதான தெருக்கள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன், பேரூராட்சி நிர்வாகம் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

Read More

ஒருநாள் இரவு மழைக்கே தாங்காத அதிரை… நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அவலம்!

Posted by - November 3, 2021

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 மூன்று நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் விடாமல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அதிரை நகரம் முழுவதும் வெள்ளநீரில் தத்தளிக்கிறது. நேற்று இரவு முழுவதும்

Read More

அதிரை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் அப்பாவி மக்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி பரிதவிப்பு!

Posted by - November 3, 2021

அதிரை பகுதியில் தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்.அப்பாவி மக்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி பரிதவிப்பு.நேற்று இரவிலிருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அதிரையின் பல பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கடுத்து ஓடுகிறது.பல தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து பொதுமக்களை மிகபெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதிலும் குறிப்பாக முத்தம்மாள் தெரு, பிலால் நகர், புதுத்தெரு தென்புறம் போன்ற பகுதி விளிம்புநிலை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் என்னசெய்வதென்றே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)