பட்டினியில் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட மோசமான நிலைக்கு சென்ற இந்தியா!

Posted by - October 14, 2021

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. தற்போதுள்ள பட்டியலின்படி, இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே மோசமாக உள்ளன. பப்புவா நியூ கினியா (102), ஆப்கானிஸ்தான் (103), நைஜீரியா (103), காங்கோ (105), மொசாம்பிக் (106), சியரா லியோன்

Read More

உஷார்! உஷார்!! அதிரையை வட்டமிடும் நில மோசடி கும்பல்! உங்க சொத்து சரியா இருக்கா??

Posted by - October 14, 2021

வெளிநாடுவாழ் அதிரையர்களின் சொத்துக்கள் உள்ளூரில் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. அதனை வேலி அடைத்து பாதுகாக்கவும் அவ்வப்போது சென்று பார்வையிடவும் கூட பலரும் முன்வருவதில்லை. இது கெஞ்சத்தனமா அல்லது சிக்கனமா? என தெரியவில்லை. ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல், போலியாக ஆவணங்கள் தயார் செய்து விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாயகத்தில் சொத்துக்கள் வாங்க கூடிய வெளிநாடுவாழ் அதிரையர்கள், உரிய முறையில் ஆய்வு செய்து நம்பகமான நபர்களிடம் இருந்து மட்டும் சொத்துக்களை

Read More

சிக்கன் கிரேவியுடன் குளிர்பானம் – தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம்!

Posted by - October 14, 2021

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகம் அவரது மகள் தர்ஷினியும் அருகே உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர். வீட்டில் தயாரித்து வைத்திருந்த உணவுடன் சேர்த்து சிக்கன் கிரேவி சாப்பிட்ட இருவரும் அதன் பிறகு வயிறு எரிச்சல் இருந்தால் பக்கத்து

Read More

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

Posted by - October 14, 2021

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 10ம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது. வங்க கடலை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)