தஞ்சை மாவட்ட அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் – அமைச்சர், அரசு அதிகாரிகள் பங்கேற்பு!

Posted by - October 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று 30/10/2021 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

தமிழகத்தில் நாளை முதல் 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்!

Posted by - October 31, 2021

தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1 ஆம் தேதி, முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் நிலையில் அவர்களுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தொடங்கியது. அப்போது இருந்த அதிமுக ஆட்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தது.

Read More

நவ. 4 வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை.. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Posted by - October 31, 2021

தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை இரண்டும் சேர்ந்தும் தீவிர மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

Read More

தமிழகத்தில் மிக கனமழை – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Posted by - October 30, 2021

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி,

Read More

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக! முதலமைச்சர் தனிப்பிரிவில் அதிரை ஆமினா’ஸ் மனு!!

Posted by - October 29, 2021

கட்டுமான பொருட்களின் முறையற்ற விலை உயர்வால் அதிரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அதிரை ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் “சமீபகாலமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.100/-க்கு மேலும், கம்பி டன்னுக்கு ரூ.20,000/-யை தாண்டியும் கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல்  எம்-சாண்ட்,

Read More

அதிரை: மது போதையில் மரண தாக்குதல் ! தப்பி பிழைத்த உ.பி வியாபாரி !!

Posted by - October 28, 2021

அதிராம்படினம் சேது சாலையில் இயங்கி வருகிறது அங்கீகாரமற்ற மதுபான கடை. இந்த கடையில் சட்டத்திற்கு விரோதாமாக 24 மணி நேரமும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் மதுகுடித்த இருவர் எதிர் சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த உ.பி வியாபாரிகள் மீது கண்மூடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரத்த காயங்களுடன் கிடந்த நபரை அங்கிருந்த சக வியாபாரிகள் மீட்டுள்ளனர். ரத்த காயங்களுடன் காவல் நிலையம் சென்ற இருவரையும் சட்டை செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில்

Read More

தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!

Posted by - October 28, 2021

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB

Read More

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக்கூட்டம்(படங்கள்)

Posted by - October 28, 2021

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம்(26/10/2021) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

அதிரை திருமணத்தில் நகையை காணவில்லை!

Posted by - October 28, 2021

அதிராம்பட்டினத்தில் 24-10-2021, ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிலைகாரத் தெருவில் உள்ள காய்கறி கடை நைனா முஹம்மத் அவர்களின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அன்று திருமணத்திற்கு வருகை புரிந்த பிலால் நகரை சேர்ந்த ஒரு பெண் அணிந்திருந்த நகை (Necklace) தெரியாமல் தவறுதலாக அறுந்து கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த அந்த நகையினை அருகில் இருந்த வேறு ஒரு பெண் எடுத்து இந்த நகை யாருடையது என்று கேட்டுள்ளார். அதனை அருகிலிருந்த வேறு ஒரு பெண் என்னுடைய நகை தான்

Read More

அதிரையில் நாளை மின்தடை!

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே மின்சாரம் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)