மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் உயர்மின்கோபுர விளக்கு திமுக கிளை செயலாளரிடம் உறுதி.!

Posted by - July 10, 2021

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜிடம் மல்லிப்பட்டிணம் திமுக கிளை செயலாளர் கோரிக்கை வைத்தார்.இதனை பரிசீலனை செய்வதாக சுவாதி காமராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே அமைத்து தர விரைவில் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தார்.

Read More

அதிரையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - July 10, 2021

பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்திட்ட ஒன்றிய அரசை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது. கார் ,வேன் , ஆட்டோ , டெம்போ ,லாரி , டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்கள் , உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர். தொடர்புக்கு 81100037579788050998

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)