மீனவர்களுடன் சகஜமாக பழகி மீன்பிடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி !(படங்கள்)
கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்து சென்றார். கொல்லத்தில் நேற்று மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று குறிப்பிட்ட ராகுல்