“அப்பாவை இழந்தது மிகவும் கடினமான தருணம்!” – ராகுல் உருக்கம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி, இன்று (17/02/2021) புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு ராகுல்காந்தி, இன்று (17/02/2021) மதியம் 02.35 மணிக்கு வந்தார். பின்பு, அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத்