அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

Posted by - January 31, 2021

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் நடைபெற்று வரும் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமினை

Read More

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் !

Posted by - January 31, 2021

தமிழகம் முழுவதும் நாளை (நாளை 31ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

Posted by - January 30, 2021

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில் அட்மிஷன் (மாணவர் சேர்க்கை) தொடங்க உள்ளது. அது சமயம் மாணவர்கள் தங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். குறிப்பு:மாணவர்களின் தற்குறிப்பு (resume) எடுத்துவரவும். இப்படிக்கு, அப்துல் ராஜிக்.B.E.,ஒருங்கிணைப்பாளர்,மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர்,அதிரை.தொடர்பக்கு:7200722754

Read More

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ராணுவத்திற்கு தேர்வு!

Posted by - January 29, 2021

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள்(NCC) ராஜ்குமார் மற்றும் முத்தையா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகி சங்கர் நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன், துணை முதல்வர்கள் மேஜர் கணபதி, முஹம்மது நாசர், தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளர்

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் !

Posted by - January 28, 2021

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இந்தநிலையில் நாளை குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நாங்கள் 16 அரசியல் கட்சிகளிடமிருந்து அறிக்கையை வழங்குகிறோம். நாங்கள்

Read More

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

Posted by - January 28, 2021

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

Posted by - January 28, 2021

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக இருந்த சேக் அப்துல்லா அவர்கள் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பாக மரணம் அடைந்துள்ளார் அப்போது முதல் அவிஸோ காப்பகத்தை அபகரிக்க சிலர் முயற்ச்சி செய்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒருவர் அங்கு ட்ரைவராக பணிபுரிந்த கூத்தாடிவயலை சேர்ந்த ரவுடி விவேகானந்தன் என

Read More

செங்கோட்டையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை – புகைப்படத்துடன் நிரூபணம் !

Posted by - January 26, 2021

செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக வெளியான செய்தி தவறு என்று நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று, சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நடத்திய தடியடியால் கொதித்தெழுந்த விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முறைகையிட்டு போராடினர். அப்போது

Read More

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !

Posted by - January 26, 2021

நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாகJ. முஹம்மது புஹாரியால் கிராஅத் ஓதப்பட்டுதேசிய கீதம் பாடப்பட்டது. செயலாளர் B.ஜமாலுதீன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் M. காதர் முகைதீன் சிறப்புரை ஆற்றினார். தலைவர் P.M.K. தாஜுதீன் தேசிய கொடி ஏற்றினார். மேலும்

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் இன்று (26/01/2021 ) மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமையில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது. மதுக்கூர் காவல் ஆய்வாளர் கார்திகேயன், மீனாட்சி மருத்துவமனை டாக்டர் முஹம்மது பவாஸ், டாக்டர். சாஹிமா பேகம், சமூக ஆர்வலர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)