வெளுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!

Posted by - October 17, 2020

கடந்த ஒரு வாராங்களாகவே அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரபு தேசங்களைப் போல காலை 8 மணிக்கெல்லாம் வெயில் ஆஜராகி மக்களை வதைத்துக் கொண்டிருந்த வேளையில், இன்று மாலை 4.30 மணியிலிருந்து கரு மேகங்கள் சூழ மழை பெய்து வருகிறது. அதிரையர்களை வாட்டி வதைத்த வெயிலுக்கு ஓய்வு கொடுத்த மழை தற்போது அதிரடியை காட்டி வருகிறது.

Read More

தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - October 17, 2020

தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பகுதியில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு செய்து பொருட்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ரேஷன் கடைகளில் புகார்கள் எழுந்தன.

Read More

அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளை அமைப்பு…!

Posted by - October 17, 2020

தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளையை மாவட்ட செயலாளர் மதுக்கூர் ரஹீஸ் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இதில் SDPI கட்சியின் அதிராம்பட்டினம் மூன்றாவது கிளைத்தலைவராக தமீம் அன்சாரி,கிளை செயலாராக ஹாஜா முகைதீன் மற்றும் கிளை பொருளாளராக அப்துல் மாலிக் ஆகியோர் தேர்ந்தெடுப்பட்டனர். இந்நிகழ்வில் SDPI கட்சி அதிராம்பட்டினம் நகர,கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Read More

புடவை மாற்றுவதைப்போல கட்சி மாறும் குஷ்பு -மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா!

Posted by - October 17, 2020

சினிமாவில் பிரபல நாயகியாக இருந்த வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு திமுக அப்படியான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், சில ஆண்டுகள் இடைவெளியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு செய்திதொடர்பாளர் என்ற முக்கிய பொறுப்பை பெற்று பணியாற்றி வந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)