அதிரை கடற்கரைத்தெருவில் வடிகால் அமைக்காமல் வேக வேகமாக நடைபெற்று வரும் புதிய சாலை பணி !

Posted by - September 17, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு உட்பகுதியில் உள்ள ஷேக் உதுமான் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால், புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய வடிகால் அமைக்காமல், வேக வேகமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் நூருல் ஆபிதீன் கூறுகையில், ஷேக் உதுமான் சாலையில் புதிய வடிகால் அமைக்காமல் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து

Read More

மல்லிப்பட்டிணம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

Posted by - September 17, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே, பள்ளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பஷீர் அகமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்  மாலை அணிவத்து மரியாதை செலுத்திஇனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்வில் யூனுஸ் மற்றும் வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Read More

தஞ்சை மாவட்டத்திற்கு தற்காலிக காவல் கண்காணிப்பாளர் நியமனம்!!

Posted by - September 17, 2020

தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ் மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி செப்டம்பா் 14 ம் தேதி முதல் அக்டோபா் 9 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பங்கேற்றுள்ளாா். இவா் பயிற்சி முடித்து வரும் வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதல் பொறுப்பை சென்னை துறைமுக அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் S.S. மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)