பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Posted by - May 30, 2020

லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் எப்போது கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டாட வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் தளர்வு மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. முதல் தளர்வு வரும் ஜூன் 8ம் தேதி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே

Read More

அதிரை அஹ்மத் ஓர் வரம்! -நியூஸ்7தமிழ் சேனல் மூத்த ஆசிரியர் நெகிழ்ச்சி

Posted by - May 30, 2020

புத்தகம் தொடர்பான தேடலில், கணக்கற்ற நல்ல ஆத்மாக்களோடு தொடர்பில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம்தான். அப்படியான ஒரு தொடர்புதான் பெரியவர் அதிரை அஹ்மத் அவர்களுடனான தொடர்பு. அவர்களின் எழுத்துலகில், கனவு நூலான ‘நபி வரலாறு’ நூலை, அவர்கள் விரும்பிய வகையில், தேவைப்படும் இடங்களில் அரபி எழுத்துக்களோடு வெளிக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டோம். இலக்கியச்சோலை பதிப்பகம், அந்த நூலை வெளிக் கொண்டு வர அதிரையார் சம்மதம் தெரிவித்தவுடன்,நூல் உருவாக்கப் பணி தொடர்பாக முதல் கட்டமாக பேச,

Read More

எழுத்தாளர் அதிரை அஹமது அவர்களின் மரணம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு ~ PFI மாநில தலைவர் இரங்கல்…

Posted by - May 30, 2020

சிறந்த எழுத்தாளரும் மிகச்சிறந்த பண்பாளருமான அதிரை அஹமது அவர்களின் மரணச் செய்தி மிக்க வேதனையளிகின்றது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் முதற்கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ் மக்களுக்கு தந்துள்ளார். நபி (ஸல்) வரலாறு, நல்ல தமிழ் எழுதுவோம், அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் ஆகிய நூற்கள் அவர் சிறந்த எழுத்தாளர் என்பதற்கான சாட்சிகளாகும். நபி (ஸல்) வரலாறு எழுதுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 15 வருடங்கள். அதற்காக பல்வேறு புத்தகங்களை வாசித்தும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சென்றும் முழு

Read More

பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மது மரணம்!MLAவின் இரங்கல் செய்தி….

Posted by - May 30, 2020

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்! பல்வேறு அறிஞர்களையும், அரசியலாளர்களையும், எழுத்தாளர்களையும் தந்த ஊர்களில் அதிராம்பட்டினத்திற்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு நற்சிந்தனைகளை ஊட்டும் பல நூல்களை எழுதிய பெரியவர் பன்னூல் ஆசிரியர் அதிரை அஹமது அவர்களும் ஒருவர். இன்று அவர் காலமானார் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. குறிப்பாக அதிராம்பட்டினம் மக்களுக்கு இது பேரிழப்பாகும். அவரது நூல்களை புதுப்பித்து ,அதிரையில் அவர் பெயரால் ஒரு நூலகம் அமைப்பதே அதிரை மக்கள்

Read More

எழுத்தாளர் அதிரை அஹமது மரணத்திற்கு மமக தலைவர் இரங்கல் !

Posted by - May 30, 2020

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது. தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து அங்கு ஆலிம்கள் சிறந்த தமிழறிஞர்களாகவும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். மார்க்க பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அஹ்மது அவர்கள் சவூதி அரேபியாவில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள தமிழக முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும்

Read More

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு – மம்தா பானர்ஜி அறிவிப்பு !

Posted by - May 30, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் மே 31வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 நாட்களில் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க மசூதிகள், கோயில்கள், சர்ச்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் 4ம் கட்ட லாக்டவுன் மே 31ம்

Read More

அதிரையின் பிரபல எழுத்தாளர் மரணம் !

Posted by - May 30, 2020

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ் புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் மு.வ.செ. பாக்கர் ஆலீம்சா அவர்களின் மகனும், மர்ஹும் எம்.பி. முஹம்மது அவர்களின் சகோதரரும், பிலால், ஹஸ்ஸான், யாசீர் ஆகீயோரின் தகப்பனாரும், ரஃபீக் அஹமது, முஹம்மது தம்பி ஆகியோரின் மாமனாரும், பன்னூல் ஆசிரியருமாகிய அதிரை அஹமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 1 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை

Read More

தமிழகம் வந்ததா வெட்டுக்கிளிகள் ? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

Posted by - May 30, 2020

ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை பாதித்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, அங்குள்ள விளைநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்திலும் இந்த வெட்டுக்கிளிகள் வருமா என விவசாயிகள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி கிராமத்தில் சில இடங்களில் செடிகளில் கூட்டம், கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)