குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள் !

Posted by - May 21, 2020

அதிராம்பட்டினம் மேலத்தெரு, சதாம் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள்தோறும் குடிநீர் சப்ளை பேரூராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது. இதில் புதுமனைதெரு CMPலைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதாம் நகரில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து கிடைக்கும் குடிநீர் கடந்த இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை. ரமலான் காலம் என்பதால் மாலை நேரத்தில் விநியோகம் செய்யப்படும் நீர் கிடைக்காத காரணத்தால் தனியார் கேன் குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குடிநீர் தொடர்பாக பொறுப்பாளர்

Read More

நேர்மையான மனிதரை அதிரை இழந்துவிட்டது. சடகோபன் குறித்த நெகிழ்ச்சி சம்பவம்!

Posted by - May 21, 2020

நேற்றையத்தினம் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகக்கூடியவர் என்பதால் அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை அவர் பெற்று இருந்தார். இவரது நேர்மைக்கு பல நிகழ்வுகள் இருப்பினும், குறிப்பாக ஓர் நிகழ்வு எங்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தியது. கடற்கரையோர நிலப்பகுதியில் போர் போட வேண்டிய பொறுப்பை சடகோபன் அவர்களிடம் நாங்கள் ஒப்படைத்தோம். 100 அடியில் நல்லத்தண்ணீர் கிடைக்காவிட்டால், அடுத்து

Read More

மனமிருந்தால் நீங்களும் உதவலாம்..!!

Posted by - May 21, 2020

2015ம் ஆண்டு தனி நபராக திரு.முஹம்மது ரியாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக மக்களின் அவசர தேவைக்காக இலவச இரத்த தானம் செய்ய வழிவகை செய்வதை வழக்கமாக செய்து வந்தார். பின் நாளடைவில் இவரோடு கன்னியாகுமரிய மாவட்டத்திலிருந்து திரு.சபீர் மற்றும் ஈரோடிலிருந்து திரு.சண்முகம் மற்றும் சென்னையிலிருந்து திரு. மாரியப்பன் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் குருதி தேவையை பூர்த்தி செய்ய வழிவகை செய்தனர். தற்போது 2700 கும் மேற்பட்ட இலவச இரத்த தான தேவைகளை தமிழ்நாடு

Read More

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் ஆய்வு!!

Posted by - May 21, 2020

தஞ்சாவூர் மாவட்டம்;பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அனைத்து வார்டுகள் சுத்தமாக உள்ளதா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தார். அப்போது டாக்டர் நீயூட்டன் அவர்களிடம் இதுகுறித்து கேட்ட போது நாள் ஒன்றுக்கு இப்போது ஆயிரம் நோயாளிகள் வருகிறார்கள் எனவும் ஊரடங்கு காரணமாக குறைவாக இருக்கிறது எனவும் மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் வரை வெளி நோயாளிகள் வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

Read More

வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த தமுமுக : அதிரை வியாபாரிகள் மகிழ்ச்சி!!

Posted by - May 21, 2020

கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர். ஊரடங்கின் போது வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படது. அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதியிருந்த போது சிலர் அந்த நேரங்களை தாண்டியும் கடைகளை திறந்ததால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சிறுகுறு வர்த்தகங்கள் முடங்கின. இதனையடுத்து அதிரை

Read More

பொதுமக்களுக்கு காவல் துறையின் அறிவிப்பு !

Posted by - May 21, 2020

வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு,பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்,புதிதாக உருவாகும் நிலை ஏற்படகூடும்! குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றமும் ஏற்படலாம். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர். விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம். விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள். உங்கள் மொபைல் போன்களை

Read More

அதிரையில் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் காலமானார்..!!

Posted by - May 21, 2020

அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ராமானுஜம் பிரின்டர்ஸ் உரிமையாளர் அவர்களின் சகோதரர், சீனிவாசன் சபரி ஆகியோரின் தந்தையும் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் நேற்று(20-05-2020) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு இன்று(21-05-2020) காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)