ஊரடங்கால் அதிரையில் சிக்கிய பெங்களூர்வாசிகள் – பாப்புலர் ப்ரண்ட் சட்ட உதவிக்குழுவின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினர் !

Posted by - May 13, 2020

சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 144 ஊரடங்கு சட்டம் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில்

Read More

எல்லா நாட்டு மருத்துவதுறையினரும் இலவசமாக பயணிக்கலாம் கத்தார் ஏர்வேஸ்…

Posted by - May 13, 2020

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்வேஸ், கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களுக்காக 1 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் பேரிழப்பை சந்தித்துள்ளன. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்களை பறித்துள்ள இந்த வைரஸை எதிர்த்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராடி வருகின்றனர். இரவு பகல் பாராது உழைத்து வரும் இவர்களுக்கு பாராட்டுக்களும், வேண்டுதல்களும் குவிந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில் சர்வதேச

Read More

அதிரை மருத்துவமனை செவிலியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து!

Posted by - May 13, 2020

அதிரை மருத்துவமனை செவிலியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. உலக செவிலியர் தினம் முன்னிட்டு உலகம் முழுவதும் நோய்த்தொற்று உடன் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்யும் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர் உடன் மக்கள் நீதி மய்யம் தென் கிழக்கு மாவட்டம் செயலாளர் டாக்டர் சதாசிவம் அவர்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 200 வது பிறந்தநாள் மற்றும் செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Read More

மல்லிப்பட்டிணம் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி…

Posted by - May 13, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கிளை திமுகவினர் சார்பில் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் உதவி. கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் பயனாளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சேக் அப்துல்லா,தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதின்,சவுதி பன்னாட்டு திமுக தலைவர் தாஜ் முகமது,NMK.அப்துல் மஜீத்,அப்துல் நிஜார்,KMH காதர்,MLA.நூருல் அமீன்,அப்துல் ரஷீத் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர் மற்றும் நூருல் ஹமீத்,அகமது ஜலாலுதீன் ஆகியோர்

Read More

அதிரையில் ட்ரெண்டாகி வரும் NO CAA, NRC, NPR மாஸ்க் !(வீடியோ)

Posted by - May 13, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோரை மத்திய அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நாடே கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வரும் நிலையில், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண் சபூரா

Read More

கூத்தாநல்லூரில் ஒன்று கூடிய மழை மேகங்கள்..

Posted by - May 13, 2020

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர்.குளிர்ச்சியுடன் அப்பகுதிகள் காணப்படுகிறது.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி வடமாநில தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவு வழங்கிட உத்தரவிட்ட சார் ஆட்சியர்…

Posted by - May 13, 2020

அதிராம்பட்டினத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் கட்டிட பணி உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பீகார்,உபி,ஜார்கண்ட் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அதிரையில் தங்கி பணி செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் போடப்பட்ட ஊரடங்கில் வேலையிழந்து தங்குமிடங்களிலேயே முடங்கினர். இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். முன்னதாக அரசால் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் போதுமானதாக இல்லை என்றும் அது வழங்கிய சில நாட்களிலேயே தீர்ந்து விட்டது என்றும் கூறினர். இதனை அதிரை

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெரு அக்பர் அலி.!!

Posted by - May 13, 2020

மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் மதுக்கூர் பசீர் ஸ்டோர் என்.எம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் ஜபருல்லா, என்.எம்.எஸ் முகமது தாவூது, என்.எம்.எஸ் அஜ்மல்கான், என்.எம்.எஸ் சகாபுதீன் ஆகியோரின் மச்சானும், கட்டிமேடு எஸ்.சர்புதீன் அவர்களின் மாமனாரும், தம்பி ராஜா என்கிற ஏ.முகமது தையூப் அவர்களின் தகப்பனாருமாகிய ஏ.அக்பர் அலி அவர்கள் இன்று(13.05.2020) காலை மேலத்தெரு கிராணி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Read More

மரண அறிவிப்பு ~ வெற்றிலைக்காரத்தெரு O.S.M இப்ராகீம்…

Posted by - May 13, 2020

அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம்  O.S.சாகுல் ஹமீத் மகனும்,O.S.M நிஜாம முகைதீன் அவர்களின் தகப்பனாரும்,LMA.ஜக்கரிய்யா அவர்களின் சம்மந்தியும்,LMA.அபுபக்கர் அவர்களின் மாமனாருமாகிய O.S.M அகமது இப்ராகீம் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். 

Read More

அதிரை ஆயிஷா பல் மருத்துவமனையின் சிகிச்சை நேரம் !

Posted by - May 13, 2020

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள ஆயிஷா பல் மருத்துவமனை ரமலான் நோன்பு காரணமாக சிகிச்சை வழங்கும் நேரம் மாற்றப்பட்டு உள்ளன இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில கட்டுப்பாடுகளுடன் கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கான நேரம் காலை 10:30 மணிமுதல் பகல் 1 மணி வரையும்,மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு 9500192734

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)