அதிரையில் பட்டினி நோன்பு வைக்கும் வட மாநிலத்து தொழிலாளர்கள்!

Posted by - May 11, 2020

அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர் தொழில் நிமித்தமாக தங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் இவர்களுக்கு தொழிற்பாதிப்பு ஏற்பட்டு முடங்கினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள். இதனிடையே ரமலான் காலம் வந்துவிட்டதால் கடமையான ரமலான் நோன்பை நோற்கும் நிலை வந்தன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவர்களுக்கு அரசு சொற்ப அளவிலான உணவு பொருட்களை மட்டுமே வழங்கியிருந்தது. அது போதுமானதாக இல்லாத போதும் இவ்வளவு நாட்கள் போதுமாக்கி கொண்டனர். இந்நிலையில் ரமலான் நோன்பு நோற்க போதிய உணவு

Read More

டாஸ்மாஸ்கில் பரவாதது சலூன் கடைகளை திறந்தால் பரவுமாம்… ரவிக்குமார் MP காட்டம் !

Posted by - May 11, 2020

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சலூன் கடைகள் மூடப்பட்டு உள்ளன.. விஜயகாந்த்துக்கு பிரேமலதா ஷேவ் செய்து, டை அடித்து விட்டதுபோல, முடிந்தவரை சிலர் வீடுகளுக்குள்ளேயே இதை செய்து கொள்கின்றனர் என்றாலும், பெரும்பாலானோர் ஷேவிங் செய்ய முடியாமலும், முடி வெட்ட முடியாமலும் தாடி மீசையை டிரிம் செய்ய முடியாமலும், தலைக்கு டை அடிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னொரு பக்கம் பெரும்பாலான சவரத் தொழிலாளர்களும் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

Read More

மல்லிப்பட்டிணம்:துப்புரவு பணியாளர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவாரண உதவி..

Posted by - May 11, 2020

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று(மே.11) திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுபடுத்த சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி,காய்கறி மற்றும் மளிகை பொருட்களை திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் வழங்கினார்.இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,திமுக பிரதிநிதி

Read More

அதிரையில் நாளை மின் தடை !

Posted by - May 11, 2020

அதிராம்பட்டினம் 33KV துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் அவசர பராமரிப்பு செய்ய உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் மின் விநியோகம் இருக்காது. இதேபோல் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பின் வரும் கிராமங்களான மழவேனிற்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், ஏரிபுறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மின் தடை இருக்கும் என அதிராம்பட்டினம் உதவி

Read More

15 வயது சிறுமி எரித்துக்கொலை,அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..

Posted by - May 11, 2020

விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமதுரையில் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் தன்னை கொளுத்தியதாக மருத்துவமனையில் சிறுமி வாக்குமூலம்.முன்விரோதம் காரணமாக சிறுமியை எரித்த அதிமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் அதிரடி கைது 95% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி மருத்துவமனையில் பரிதாப பலி.

Read More

மல்லிப்பட்டிணம் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா..?

Posted by - May 11, 2020

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நிரந்த மின்ஊழியர் பணி அமர்த்த பொதுமக்கள் கோரிக்கை. சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் பகுதியில் அடிக்கடி மின் பழுதுகள் போன்ற காரணங்களால் மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது,இதனை சரிசெய்வதற்கு நாடியம் மின்நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனை தவிர்த்திட மல்லிப்பட்டிணம் பகுதிகளுக்கு நிரந்தர மின்ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக கூறி வருவதாகவும் இதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Read More

“கோவில்களுக்குச் சென்று கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடும் இஸ்லாமிய பெண்” – டெல்லியில் நெகிழ்ச்சி !

Posted by - May 11, 2020

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து வருகிறார் 32 வயதான இஸ்லாமிய பெண் இம்ரானா. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 3 குழந்தைகளுக்குத் தாயான இஸ்லாமிய பெண்ணான இம்ரானா என்பவர், நோன்பு கடைபிடித்துக்கொண்டே கொரோனா ஒழிப்புப் பணியைச் செய்து வருகிறார். இம்ரானாவின் கணவர் நியாமத் அலி ஒரு ப்ளம்பர். இருவரும் வேலை செய்துதான் குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். தற்போது நாடு

Read More

அமீரகத்தில் கின்னஸ் சாதனை படைத்த அதிரை மாணாக்கர்களின் பிரத்யேக பேட்டி !

Posted by - May 11, 2020

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சைஃப் என்ற மகனும், அலிஸ்ஸா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சார்ஜாவில் உள்ள கல்ஃப் ஏசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். சார்ஜாவில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்ற ராக்கெட் வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி நடைபெற்றது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)