முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி !

Posted by - May 10, 2020

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (87) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக டாக்டர் மன்மோகன் இருந்தவர் என்பதும், பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், 90களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

கொரோனா பரவல் ஒருபுறம், பயணிகள் ரயில்சேவை மறுபுறம்…!

Posted by - May 10, 2020

மே 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது ரயில் சேவையை தொடங்க இருப்பதாக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு முதல்கட்ட ரயில் சேவை இயக்கப்படுகிறது.ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். நாளை(மே.11) மாலை 4 மணியிலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

ஊரடங்கு பாஷிசத்தை எதிர்த்து இணைய மாநாடு! தடையை தகர்த்து எறிந்து சாதனை !!

Posted by - May 10, 2020

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது. தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில் கண்ட இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். PFI சேர்மன் சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக சசிகாந்த் IAS, செய்யது கலீலுர்ரஹ்மான் சஜ்ஜாத் ரஹ்மானி, SDPIயின் தேசிய செயலாளர் தஸ்னீம் ரஹ்மானி,PFI பொது செயலாளர் அனீஸ் அஹமது,ரவி நாயர்,

Read More

அதிரை புதுப்பள்ளி முஹல்லாவில் அரிசி, பேரிட்சை விநியோகம் !

Posted by - May 10, 2020

அதிராம்பட்டினத்தில் உள்ள புதுப்பள்ளிவாசலில் அரசால் நோன்பு கஞ்சிக்காக வழங்கப்பட்ட அரிசியை முஹல்லா வாசிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல்படியாக சுமார் 120 வீடுகளுக்கு பேரித்தம்பழம் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சுமார் 6கிலோ பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதனை பள்ளிவாசலின் நிர்வாக கமிட்டி சிறப்பாக செய்துள்ளது.

Read More

தமிழகத்தில் 34 வகை கடைகள் திறக்க அனுமதி, அதிரைக்கு பொருந்துமா இந்த அறிவிப்பு…!

Posted by - May 10, 2020

தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. கடந்த மே 2 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின்

Read More

ரமலான் மாத கட்டுரைபோட்டி…கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப இன்றே கடைசி நாள் !

Posted by - May 10, 2020

ரமலான் மாத கட்டுரைப்போட்டி தலைப்பு:- அச்சுறுத்தும் கொரோனாவும்…!! அழகிய ரமலானும்…!! பங்கு பெற தகுதியானவர்கள்:- 6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:- 10.05.2020 பரிசுகள் விபரம்:-முதல் பரிசு ரூ.1000/-இரண்டாம் பரிசு ரூ.750/-மூன்றாம் பரிசு ரூ.500/- விதிமுறைகள்:- 1.கண்டிப்பாக இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெற

Read More

தற்சார்பு பொருளாதாரத்தின் பால் மீளும் அதிரையர்கள் !

Posted by - May 10, 2020

கொடூரமான கொரானா நோயால் உலகமே அடங்கி போயுள்ளது. இதனால் IT நிறுவனங்கள் முதல் அன்றாடம் பிழைப்பு நடத்தும் அங்காடிகள் வரை முழு அடைப்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருளாதாரத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை அதிரையர்கள் மேற்கொண்டு வருகின்றனர். முன்பொரு காலத்தில் ஒயிட்காலர் ஜாப் மட்டுமே பார்த்து வந்த அதிரையர்கள் பலரை பல படித்தரங்களை இறக்கி உழைக்க வைத்துள்ளது கொரோனா! அந்த வகையில் இன்று அதிரையை சுற்றிலும் சுய தொழில்கள் மிகுந்து ஸ்மால் ஜப்பானாகவே மாறியுள்ளது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)