தஞ்சை, திருவாரூர், நாகையில் வண்ண அடையாள அட்டை திட்டம் தொடரும் – மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவிப்பு !

Posted by - May 5, 2020

தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் IAS எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகம் IAS வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொருள் வாங்கும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிதல்

Read More

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து ~ மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்…

Posted by - May 5, 2020

நாடு முழுக்க பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியிலேயே தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவை ரத்து செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

94 வழக்குகள் பதிவு ~ உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்…

Posted by - May 5, 2020

கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு! கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்திகள் பரப்பட்டு வந்தநிலையில், இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு சில புகார்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படவும்,

Read More

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்படும் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு !

Posted by - May 5, 2020

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறப்பு தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2020-2021ஆம் ஆண்டிற்கான வகுப்புகளை துவங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல்

Read More

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கல்…!

Posted by - May 5, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. இன்று(மே.5) காலை ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவை யான பாதுகாப்பு உடைகள்,உபகரணங்களை வழங்கினர்.இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் T.பழனிவேல் உடன் ஊராட்சி தலைவர் S.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் N.சுரேஷ் , வார்டு உறுப்பினர் S.குணா உடன் இருந்தனர்.

Read More

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை ~ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Posted by - May 5, 2020

தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை 18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை. தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Read More

கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெறும் அரசு ~பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கண்டனம்..!

Posted by - May 5, 2020

நாடு முழுதும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்த விவகாரம் கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது, மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:தமிழகத்தில் வரும் மே 7ம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள்

Read More

அதிரையில் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள்…!

Posted by - May 5, 2020

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த ஊரடங்கினால் பால்,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தாண்டி வேறு கடைகள் திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவில் சில மாறுதல்களை செய்து மே 3ம் தேதி முதல் தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டு இந்த தளர்வுகள் அதிரைக்கு பொருந்தாது என்ற அறிவிப்பை பேரூராட்சி வெளியிட்டது. இப்படி பல அறிவிப்புகளால் கடைகள் திறக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்

Read More

சாரயக்கடை சாத்தியம் எனில்,நோன்பு கஞ்சியும் சாத்தியமே !

Posted by - May 5, 2020

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் முதல் வழிபாட்டு தளங்கள்,வணிக வளாகங்கள் சிறு வணிகம் என எல்லா வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் பலரின் வாழ்வாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ளது. இருப்பினும் கொரோனா எனும் கொள்ளை நோயை விரட்ட அனைவரும் அரசுக்கு ஒத்துழைத்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் அரசால் நடத்தப்படும் மதுபான கூடங்கள், படிப்படியாக துவக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து ஏனைய இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்க

Read More

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க நடவடிக்கை வேண்டும் – இந்திய தேசிய லீக் வலியுறுத்தல் !

Posted by - May 5, 2020

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்திய முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஏதாவது பிரச்சனை என்றால் குறிப்பிட்ட துறை அதிகாரிகளை அலை பேசி மற்றும் வாட்ஸ் அப் மூலம் சம்பந்தபட்ட சமூக பிரச்சினைகளை தகவலாக கூறும்போது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)