பட்டுக்கோட்டையில் தீவிர ரோந்து,கடைகளுக்கு சீல்(படங்கள்)…!

Posted by - May 4, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டை சவுக் காண்டி தெருவில் உள்ள ரஸ்க்பேட்டரி மாலை 5 மணிக்கு மேல் திறந்து இருந்ததால் காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் நகர வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் 5 மணிக்கு மேல் நகரப்பகுதியில் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு

Read More

குடிமகன்களின் மனம் குளிர அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!

Posted by - May 4, 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தன. 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள

Read More

இஸ்லாமியர்கள் மீதான அவதூறு.. அமீரகத்தில் அடுத்தடுத்து வேலையிழக்கும் இந்தியர்கள்..!

Posted by - May 4, 2020

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். துபாயில் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த ராவத் ரோஹித், மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்த ஒருவர் என இரண்டு பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக

Read More

அதிரைக்கு தளர்வுகள் பொருந்தாது!! பேரூராட்சி திட்டவட்டம்!!

Posted by - May 4, 2020

கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக ஊரடங்கை மத்திய,மாநில அரசுகள் அறிவித்து இருந்தன.இதில் சில தளர்வுகளை மாநிலம் முழுவதும் தமிழக அரசு அறிவித்து செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மே 17 வரை அரசு அறிவித்த படி 144 ஊரடங்கு தடை உத்தரவு தொடரும் என்றும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்,இதற்கு வணிக வியாபாரிகளும்,பொதுமக்கள் அனைவரும்

Read More

சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் – சோனியா அறிவிப்பு !

Posted by - May 4, 2020

கொரோனாவை தடுக்க நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பெட்டிக்கு 54 பயணிகள் என்ற அளவில் தனிநபர் இடைவெளியுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால்

Read More

மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டிணம் மைமுன் சரிபா…!

Posted by - May 4, 2020

மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு ஜனாப் மீ.மு.முகைதீன் குப்பை அவர்களின் மனைவி மைமூன் சரிபா அவர்கள் இன்று (4-5-2020) காலையில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Read More

அதிரையில் அறுந்து தொங்கிய மின்கம்பி! தன்னார்வலர்களுக்கு ராயல் சல்யூட்!!

Posted by - May 4, 2020

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிரை எக்ஸ்பிரஸ் தெருவாரியான வாட்ஸ்அப் க்ரூப்பில் தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிரை மின்வாரியத்தின் தரைவழி தொலைபேசி எண் செயல்பாட்டில் இல்லாததால் 1912 என்ற மின்வாரிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் ஃபாய்ஸ் புகார் அளித்தார். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களும், அதிரை மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளளனர். இதனையடுத்து விரைந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)