அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சட்ட உதவிக்குழுவின் தொடர் பணிகள் !

Posted by - May 2, 2020

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள். மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ்

Read More

அதிரை பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு தொடர் பணிகள்..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றது அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள். மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ் மக்கள்

Read More

ஆட்டத்தை நிறுத்த ஆப்பு வைத்த அதிரை காவல்துறை!!

Posted by - May 2, 2020

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தடை உத்தரவு காலத்தில் வெளியில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரை காவல்துறை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

Read More

அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பல சேவை!!

Posted by - May 2, 2020

முத்துப்பேட்டையில் ” கொரோனா கிருமி “, பாதிப்பால் ஏற்பட்டுள்ள பல இடையூர்களை சிறப்பாக ஒற்றுமையுடன் , செயல்பட்டுக் கொண்டு உள்ள அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பல சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வட்டாசியர், காவல்துறை கண்கானிப்பாளர், DSP, மாவட்ட சுகாதார அதிகாரிகள் பேரூராட்சி EO,. ஒத்துழைப்பில் நமக்கு பல நலன்களை பெற்றோம். இந்த கொரொனா நம்பகுதி மக்கள் பல கஷ்டங்களையும் அறுபவித்து வந்து கொண்டு உள்ளர். ★

Read More

இளைஞர்களை கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை…!

Posted by - May 2, 2020

ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்துக் கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையைக் கோவை காவல்துறை வழங்கியது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3வது முறையாக நாடு முழுதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாரத்தில் 7 நாட்கள் 7 வண்ணங்கள் வாகனங்களில்

Read More

மூன்றாம் கட்ட லாக்டவுன் : புதிய தளர்வுகள்.. தொடரும் தடைகள் – முழு விவரம் !

Posted by - May 2, 2020

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக நடந்த இந்தக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த

Read More

அதிரையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வட நாட்டு ஊழியர்கள் !

Posted by - May 2, 2020

அதிராம்பட்டினத்தில் பல்வேறு பணிகளுக்காக பீஹார் உத்திரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிரையில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சேர்மன்வாடி,கடைதெரு,பழஞ்செட்டி தெரு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேளையில்லாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர். அரசு,மற்றும் தன்னார்வலர்கள் உதவி வந்த நிலையில் இவர்களை தனி ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு உள்ளது. அதன் படி இன்று மாலை கிராம

Read More

மீண்டும் கொரோனாவை பரவலாக்கிய கோயம்பேடு சந்தை,ஒத்துழைக்காத மக்கள்…!

Posted by - May 2, 2020

உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் இருந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்வரை பரவல் விகிதம் குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது,இவர்களை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து பார்க்கையில் இவர்களுக்குள் கோயம்பேடு சந்தை தொடர்பு

Read More

மல்லிப்பட்டிணத்தில் ஊராட்சி மூலம் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்..!

Posted by - May 2, 2020

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிருமிநாசினி இன்று(மே.2) தெளிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநில,மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் 1,2 மற்றும் 3 வார்டுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Read More

தஞ்சை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு ~ ஆட்சியர் உத்தரவு …!

Posted by - May 2, 2020

கொரோனா தொற்றின் பரவலையடுத்து மாநில,மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை(மே.3) ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அறிவித்தார்,உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மேலும் மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.முன்னதாக கடலூர், திருவாரூர், அரியலூரை மாவட்ட ஆட்சியர்களும் முழு ஊரடங்கை அறிவித்து இருந்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)