கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் !

Posted by - April 30, 2020

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வாசலில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் IAS நேரில் சென்று அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். அப்போது

Read More

இறந்த ஆதரவற்ற முதியவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி அடக்கத்திற்கு உதவிய பேராவூரணி எம்எல்ஏ !

Posted by - April 30, 2020

நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அறிந்த பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு MLA சம்பவ இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். மேலும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து உடல் அடக்கம் செய்யும் வரை உடனிருந்தார்.

Read More

டி.வி சேனலாக அதிரை எக்ஸ்பிரஸ் மாற வேண்டும்! -வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி

Posted by - April 30, 2020

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் ஊடக சக்தியாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்வதை முகநூல் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும், இணையத்தை தினந்தோறும் பார்வையிட வருகைதரும் பார்வையாளர்களின் பதிவேடும் உணர்த்துகிறது. மத்திய அரசின் பதிவுபெற்ற அதிரை எக்ஸ்பிரசில் மேலத்தெரு, பிலால் நகர், கடற்கரை தெரு, தரகர் தெரு, வாய்க்கால் தெரு, புதுத்தெரு, திலகர் தெரு, முத்தமாள் தெரு, நடுத்தெரு, புதுமனை தெரு, ஆஸ்பத்திரி தெரு, ஆகிய தெருக்களை சேர்ந்தவர்களும் புதுக்கோட்டை உள்ளூர், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, தொண்டி, செந்தலை,

Read More

மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் பலி !

Posted by - April 30, 2020

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று (30/04/2020) காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. லேசாக தொடங்கிய மழை கன மழையாக மாறி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது. இந்நிலையில் இடியுடன் கூடிய மழையால் மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மதுக்கூர் செய்டித் தெருவைச்

Read More

அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!

Posted by - April 30, 2020

தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது பலகடைகளில் (சானிடைசர்/வாஸ்பேஷன்) கை கழுவும் வசதியானது அமைக்கப்படாமல் இருந்தது.இதனை கவனித்த நகராட்சி ஆணையர் கட்டாயம் கை கழுவும் வசதி அமைக்க வலியுறுத்தி கடை உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர்.

Read More

அதிரையில் இவ்வாண்டு கால்பந்து தொடர் போட்டி ரத்து…!

Posted by - April 30, 2020

அதிராம்பட்டினம் இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு கால்பந்து தொடர்போட்டி இந்தாண்டு(2020) கொரோனா காரணமாக நடைபெறாது என்பதை கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Read More

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

Posted by - April 30, 2020

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய முழுவது 144 தடை அமலில் இருப்பதால் சந்திரமோகன் தனது மனைவியை அவர் பணிபுரியும் வங்கியில் காலை விட்டு மாலை அழைத்து செல்வது வழக்கம். இதே போல் தினமும் வந்து சென்றுகொண்டிருந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன். இரவு பகல் பார்க்காமல் பணி செய்யும்

Read More

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? இது குறித்து உடனடி அறிவிப்பை வெளியிடுக ~ திமுக தலைவர் ஸ்டாலின்…

Posted by - April 30, 2020

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய – மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், “கரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. கரோனா பரவலைத் தடுத்து,

Read More

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்ப தமிழக அரசு ஏற்பாடு…!

Posted by - April 30, 2020

கொரோனா ஊரடங்கினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள்,வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் ஆகியோர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.அவர்களின் நலனையும்,குடும்பத்தார் நலனையும் கருத்தில் கொண்டு,மேலும் எண்ணிக்கையை அறிவதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவித்தது தமிழக அரசு. nonresidenttamil.org என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு.

Read More

மல்லிப்பட்டிணத்தில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ…!

Posted by - April 30, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இன்று(ஏப்.30) மதியம் பலத்த இடி,மின்னலால் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தீ ஏற்பட்டு கருகியது. மல்லிப்பட்டிணம் காதிரியா தெருவில் உள்ள ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் மரங்களை வளர்த்து வந்தார்,இந்நிலையில் மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.அப்போது ஏற்பட்ட மின்னலுடன் இடியால் அங்கிருந்த தென்னை மரத்தில் விழுந்து நெருப்பு எரியத் தொடங்கியது, அருகில் உள்ளவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)