அதிரை நகர்

அதிரை நகர்

அத்துமீறிய அதிரை நகராட்சி! லெஃப்ட் ரைட் வாங்கிய ரயில்வே போலிஸ்!

Posted by - June 30, 2022
குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் பேய் கதைகளை சிறுவயதில் நாம் கேட்டிருப்போம். அத்தகைய சூழலில் தான் தற்போது அதிரை நகராட்சி உள்ளது. வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் சேகரித்த குப்பையை டிராக்டரில் ஏற்றி வைத்துக்கொண்டு எங்கு கொட்டுவது என…
Read More

நீர்… நிலம்.. காற்று! மாசுபடுத்தும் அதிரை நகராட்சி!! பதறும் மக்கள்! துயர் துடைப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்?

Posted by - June 29, 2022
அதிரை நகராட்சிக்கு சொத்து, வியாபாரம் உள்ளிட்டவற்றிற்கான கப்பங்களை நாள் தவறாமல் மக்கள் கட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை கொண்டு திறன்மிக்க நிர்வாகத்தை வழங்க முடியாமல் நகராட்சி திணறி வருவதாக பேசப்படுகிறது. இவற்றிற்கு சான்றாக திடக்கழிவு மேலாண்மையில் அதிரை நகராட்சி நிர்வாகம் எடுத்த…
Read More

அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு மனிதம் விருது!

Posted by - June 27, 2022
அதிரை ராயல் ஹாஸ்பிடாலிட்டியில் நடைபெற்ற ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில், அதிரை சுற்றுவட்டார மக்களுக்கு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கட்டணமின்றி வழங்கும் அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு( Adirai Unity Welfare Association) சேவையை பாராட்டி…
Read More

அதிரையில் தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை!

Posted by - June 25, 2022
அதிரையில் இயங்க கூடிய நிறுவனம் ஒன்றுக்கு தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை. விருப்பம் உள்ளவர்கள் +91 99440 84992 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
Read More

அதிரையில் ரூ. 700க்கு ஒரு கிலோ மட்டன்! வாலி இலவசம்!!

Posted by - June 22, 2022
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே செயல்பட்டு வந்த தக்வா மட்டன் கடை, வரும் வெள்ளிக்கிழமை தக்வா பள்ளி பெரிய மார்க்கெட்டில் திறக்கப்பட இருக்கிறது. திறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ மட்டன் ரூ. 700/-க்கு விற்பனை செய்யப்படுவதுடன்…
Read More

அதிரையில் இறுதிக்கட்டத்தை எட்டிய ஆதார் சிறப்பு முகாம்! பயன்படுதிக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு!!

Posted by - June 21, 2022
அதிரை மக்களின் தேவையற்ற பொருட்செலவு மற்றும் அலைச்சலை தவிர்க்க ஏதுவாக இம்தாத் இந்தியாமற்றும் தபால்துறை இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தி வருகின்றன. புதுமனைத்தெருவில் உள்ளஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்த ஆதார் சிறப்பு முகாமில் 700க்கும் மேற்பட்டோர்பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு முகாம் நிறைவு பெறஇருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுமற்றும் மேலதிக தகவல்களுக்கு +91 9944046001 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
Read More

அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

Posted by - June 21, 2022
கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ். தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.
Read More

10ம் வகுப்பு தேர்வு முடிவு: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 94.5% தேர்ச்சி!!

Posted by - June 20, 2022
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 129 மாணவிகள் எழுதினர். இதில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுதேர்வு எழுதிய 129 பேரில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் இந்த பள்ளி 100% தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More

+2 தேர்வில் அதிரையின் சராசரி தேர்ச்சியை கூட தொடாத மாணவர்கள்! 99.3% தேர்ச்சி பெற்று மாஸ் காட்டிய மாணவிகள்!!

Posted by - June 20, 2022
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அதிரையில் உள்ள கல்வி நிறுவனங்களின்சராசரி தேர்ச்சி விகிதம் 95.5%மாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.3% ஆகும். ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92% மட்டுமே. இது அதிரையின் சராசரி தேர்ச்சி விகிதமான95.5சதவீதத்தை விட 3.5% குறைவாகும். மேலும் மாணவர்களை விட 7.3% மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று இந்தமுறையும் மாஸ் காட்டியுள்ளனர். அதேசமயம் அதிரையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு70%க்கும் அதிகமான மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Read More

98% தேர்ச்சி!! 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஸ்கோர் செய்த அதிரை அரசு பள்ளி!

Posted by - June 20, 2022
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)